For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெதர்லாந்து சிறைகளை வாடகைக்குப் பிடித்து கைதிகளை அடைக்கும் நார்வே!

Google Oneindia Tamil News

ஆஸ்லோ: நார்வேயில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்ற காரணத்தினால், அங்குள்ள சிறைகள் நிரம்பி வழிகின்றன.

இதனால் நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளை வாடகைக்குப் பிடித்து அங்கு தனது நாட்டு கைதிகளை நார்வே அடைத்து வருகிறதாம்.

நார்வே நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Holland rents out empty jail cells to ease overcrowded jails

எண்ணிக்கை அதிகரிப்பு:

இதனால் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சிறைப் பற்றாக்குறை:

இப்படிக் குற்றவாளிகள் ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அடைப்பதற்கு போதிய சிறை வசதிகள் இல்லை.

வரிசையில் 1300 பேர்:

இவர்களை அடைப்பதற்கு அந்த நாட்டு சிறைகளில் போதிய இட வசதி இல்லை. இதனால் சிறைக்கு போகவேண்டிய வரிசையில் 1,300 கைதிகள் காத்துக் கிடக்கிறார்கள்.

வாடகைக்கு சிறை:

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நார்வே அரசு தற்போது புதிய யோசனையை கையாள ஆரம்பித்துள்ளது. அதாவது சிறைகளை வாடகைக்கு எடுத்து அங்கு கைதிகளை அடைப்பது என்பதுதான் அது.

பிளீஸ் 2 ஜெயில் கடனா குடுங்க:

பக்கத்து நாடான நெதர்லாந்தின் சிறைச்சாலைகளை பயன்படுத்திக் கொள்ள நார்வே முடிவு செய்து இருக்கிறது.

300 கைதிகளுக்கு புதிய சிறை:

நெதர்லாந்தில் உள்ள சிறைகளை வாடகைக்கு எடுத்துள்ளது நார்வே. மேலும் தனது நாட்டின் 300 கைதிகளை அங்கு அனுப்பி வைக்கவுள்ளது.

நார்வேயே வாடகை தருமாம்:

இப்படி அனுப்பப்படும் கைதிகளை பராமரிப்பதற்கான வாடகை கட்டணத்தையும் நார்வே நாடே அளித்துவிடும். வருமானம் கிடைப்பதால் நெதர்லாந்தும் நார்வே கைதிகளுக்கு தனது சிறைகளை வாடகைக்கு அளிக்க முன்வந்துள்ளதாம்.

English summary
Norway to send 300 prisoners to the Netherlands, where a lack of domestic criminals has seen penal facilities sitting empty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X