For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 வருடத்தில் உலகில் இவ்வளவு மாற்றமா.. பூமியை அசத்தல் படம் பிடித்து வெளியிட்ட நாசா!

20 வருடத்தில் உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்று நாசா புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    20 வருடத்தில் உலகில் இவ்வளவு மாற்றமா.. பூமியை அசத்தல் படம் பிடித்து வெளியிட்ட நாசா!- வீடியோ

    வாஷிங்டன்: நாசா, உலகம் குறித்து புதிய புகைப்படம் ஒன்றை வெளிட்டு இருக்கிறது. அதில் கடைசி 20 வருடத்தில் உலகம் எப்படி மாறியிருக்கிறது என்று காட்டப்பட்டுள்ளது.

    மேலும் மனிதர்களின் ஆதிக்கத்தால் உலகத்தில் என்ன மாதிரி மாற்றம் எல்லாம் உருவாகி இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்துள்ளது. மேலும் இது உலகம் குறித்த ஆராய்ச்சியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாசா கூறியுள்ளது.

    அதுமட்டும் இல்லாமல் இந்த புகைப்படம் உலகம் குறித்து கூறப்பட்டு வந்த பல பொய்களை முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

    நாசாவின் புகைப்படம்

    நாசாவின் புகைப்படம்

    நாசா உலகின் கடல் பகுதிகளை ஆராய்வதற்காக 1997ல் 'சீ-விப்ஸ்' என்ற செயற்கைகோள் ஒன்றை அனுப்பியது. அந்த செயற்கைகோளில் தொடங்கி அதற்கு அடுத்து அனுப்பிய செயற்கைகோள்களையும் வைத்து நாசா புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த செயற்கைகோள்கள் இதுவரை அனுப்பிய அனைத்து புகைப்படங்களையும் ஒன்றாக சேர்த்து 20 வருடத்தில் உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்று நாசா கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது.

    மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கிறது

    மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கிறது

    இந்த புகைப்படங்களின் படி உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகள் அதிகம் மாறி இருக்கிறது. மேலும் 20 வருடத்தில் ஆச்சர்யபடுத்தும் வகையில் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கிறது. பல இடங்கள் இதற்கு எதிர்மாறாக கான்கிரீட் காடாக மாறியுள்ளது. அதேபோல் ஆப்பிரிக்க போன்ற ஏழ்மையான நாடுகள் மட்டும் எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் அப்படியே 20 வருடமாக இருந்திருக்கிறது.

    மோசமான கடல்

    மோசமான கடல்

    நாசா வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் கடலில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்த புகைப்படங்கள் அதிக அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. அதன்படி கடலில் தான் அதிக அளவில் கழிவுகள் கலக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கடலில் இருந்த செடிகள் பல மொத்தமாக அழிந்து போய் இருக்கிறது. பல இடஙகளில் கடல் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருக்கிறது. ஒவ்வொரு சுனாமிக்கு பிறகும் கடல் பெரியமாற்றத்தை சந்தித்து இருக்கிறது.

    நாசாவின் கருத்து

    நாசாவின் கருத்து

    தற்போது இந்த புகைப்படங்கள் குறித்து நாசா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறது. அதில் ''உலகம் தினமும் சுவாசிக்கிறது. நாங்கள் 20 வருடத்தில் உருவாக்கி இருக்கும் மாற்றங்கள் குறித்து வெளியிட்டு இருக்கிறோம். ஆனால் உலகும் தினமும் சிறிது சிறிதாக மாறுகிறது என்பதே உண்மை. இந்த புகைப்படங்களை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்ய இருக்கிறோம். இது எதிர்காலத்தை சரியாக கட்டமைக்க உதவும்'' என்று கூறியுள்ளது.

    English summary
    NASA released a photo on how earth has changed in 20 years
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X