For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாக்கிங்.. மோசம்.. ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா கேஸ்கள்.. சீனாவின் சீக்ரெட்டை போட்டு உடைத்தது "ஹு"

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், புத்தாண்டான கடந்த 1ம் தேதி மட்டும் சீனாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், சில நாடுகள் இன்னமும் கூட இந்த இதிலிருந்து மீண்டு வராமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், உருமாறிய பி.எஃப்-7 ரக கொரோனா தொற்று தற்போது மீண்டும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல சீனாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகள் இந்த பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் சீனா இதனை தொடர்ந்து மறைத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் குறைந்தது காட்டப்படுகிறதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி இருந்தன. இந்நிலையில், சீனாவின் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை உலக சுகாதார மையமே(WHO) வெளியிட்டிருக்கிறது.

சாலையில் கிடக்கும் சடலங்கள்! கொரோனாவில் சின்னாபின்னமான சீனா! கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்! சாலையில் கிடக்கும் சடலங்கள்! கொரோனாவில் சின்னாபின்னமான சீனா! கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!

 சீனா

சீனா

இது முன்னெப்போதயதை விடவும் பல மடங்கு அதிகமாகும். ஆனால் அந்நாட்டு அரசு கடைப்பிடித்த தீவிரமான தடுப்பு நடவடிக்கை காரணமாக தொற்று பாதிப்பு பெரிய தாக்கதை கடந்த காலத்தில் சீனாவில் ஏற்படுத்தவில்லை. ஒரு குடியிருப்பில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் கூட அந்த குடியிருப்பு அமைந்துள்ள பகுதி முழுவதும் முற்றிலுமாக சீல் வைக்கப்படும். அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. இதன் காரணமாக உயிரிழப்பு சொற்ப அளவில் பதிவானது. ஆனால் சீனாவை விட பல மடங்கு மக்கள் தொகை குறைவாக உள்ள அமெரிக்காவில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் பதிவானது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

சூழல் இதே போன்று சென்றுகொண்டிருக்கையில் சீனாவின் பொருளாதாரம் அடிவாங்க தொடங்கியது. உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல மக்களும் வெறுப்படைந்து சாலையில் போராட்டங்களில் குதித்தனர். இதனையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே தொற்று பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கின. உள்ளூர் மருந்தகங்களில் காய்ச்சல் மருந்துகள் முழுமையாக விற்று தீர்ந்தன. இதனால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக கொரோனா உயிரிழப்புகளே பதிவாகாமல் இருந்த சூழலில் தற்போது உயிரிழப்புகள் பதிவாக தொடங்கின.

 சீனா

சீனா

சர்வதேச அளவில் சீனாவில்தான் அதிக அளவு வயதானவர்கள் வாழ்கின்றனர். அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால் தற்போது இந்த முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் இவர்கள் தவித்து வருகின்றனர். சூழல் இவ்வாறு இருக்க கொரோனா தொற்று பாதிப்புகளை அந்நாட்டு அரசு வெளிப்படையாக வெளியிடாமல் மறைத்து வந்தது. இந்நிலையில் உலக சுகாதார மையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த ஜனவரி 1ம் தேதி மட்டும் சுமார் 2,18,019 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

இந்த பாதிப்பு இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் WHO எச்சரித்திருக்கிறது. ஏற்கெனவே சீனாவிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயம் என்று உலக நாடுகள் பல அறிவித்துள்ளன. இந்நிலையில் WHO இவ்வாறு கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும் அவை பயனளிக்காது என்றும் எனவே பயனளிக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The World Health Organization has reported that the number of cases of corona virus infection in China is increasing, and more than 2 lakh people have been infected in China on the 1st of the New Year alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X