For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒரே பட்டன்!" 30 ஆண்டு நீடித்த அரசியல் குழப்பம்! முடிவுக்கு வந்து இப்படிதான்! பிரதமர் மோடி பெருமிதம்

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் செல்கிறார். இந்த ஆண்டின் முதல் பயணமான இதில் பிரதமர் மோடி, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

முதலில் ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் பெர்லின் நாட்டில் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான 6ஆவது மாநாடு நடைபெற்றது,

 தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப்! கெத்து காட்டிய மதுரை சிறுவன்.. 3 போட்டிகளில் தங்கம் வென்று அசத்தல் தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப்! கெத்து காட்டிய மதுரை சிறுவன்.. 3 போட்டிகளில் தங்கம் வென்று அசத்தல்

ஜெர்மனியில் பிரதமர் மோடி

ஜெர்மனியில் பிரதமர் மோடி

இந்த மாநாட்டிற்குப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமை தாங்கினர். இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தும் முன்பு, இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி பெர்லினில் உள்ள போட்ஸ்டேமர் பிளாட்ஸ் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "என்னைப் பற்றியோ, எனது அரசைப் பற்றியோ பேச இங்கு பெர்லின் வரவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் திறன்களைப் பற்றி உங்களுடன் பேசவும், அவர்கள் குறித்துப் பேசவும் விரும்புகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று நான் குறிப்பிடுவது, இந்தியாவில் வாழும் இந்தியர்களை மட்டும் குறிப்பிடவில்லை. இங்கு வசிப்பவர்களும் அடங்குவர்.

30 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் இந்தியாவின் குழந்தைகள் அனைவரும் இந்தியர் என்ற சொல்லில் அடங்குவார்கள். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறுதியற்ற அரசியல் சூழலை ஒரு பொத்தானை அழுத்தி, இந்திய மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2014இல் முழு பெரும்பான்மை உடன் ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்த அரசை 2019இல் இந்திய மக்கள் பலப்படுத்தி உள்ளனர்.

இலக்கு

இலக்கு

இந்த ஆண்டு நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இந்தியா எந்த உச்சத்தில் இருக்கப்போகிறதோ, அந்த இலக்கை நோக்கி இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது. சீர்திருத்தங்கள் மூலம் இப்போது அரசு நாட்டை மெல்ல மாற்றி அமைத்து வருகிறது.

தேவையான சீர்திருத்தங்கள்

தேவையான சீர்திருத்தங்கள்

தேவையான சீர்திருத்தங்களைச் செய்யத் துணிச்சல் தேவை. இன்று இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வித் தரம் என அனைத்து முன்னேறி வருகிறது. நாடு, அதிகாரம், அரசு அலுவலகங்கள் எல்லாம் முன்பே இருந்த அதே தான் உள்ளது. ஆனால் இப்போது நாம் முன்னெப்போதையும் விடச் சிறந்த முடிவுகளைப் பெறுகிறோம். இப்போது அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

English summary
India has ended the politically unstable atmosphere of the last three decades by pressing a button said Prime Minister Narendra Modi: (ஜெர்மனியில் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் மோசி) Prime Minister Narendra Modi in Germany.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X