For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி காசோலை கொடுத்து கார் வாங்கி பலே மோசடி.. துபாயில் இந்தியர் உள்பட 5 பேர் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: போலி காசோலைகள் மூலம் கார்களை வாங்கி, விற்பனை செய்து வந்த ஒரு இந்தியர் உள்ளிட்ட 5 பேரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். 21 கார்களை இதுபோல வி்ற்பனை செய்து அவர்கள் லாபம் பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Indian among 5 arrested for car theft in Dubai

துபாயை சேர்ந்த அகமது ஓத்மன் என்பவர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மெர்சிடஸ் காரை ஆன்லைன் மூலம் கார்தேவை என விளம்பரம் செய்த ஒருவரிடம் 8,00000 தினார் என்ற விலையில் விற்பனை செய்ததகாவும், காரை வாங்கியவர் கொடுத்த காசோலையை வங்கியில் கொடுத்தபோது, அது அடுத்த ஆண்டுக்கான தேதி கொண்ட காசோலை என கூறி வங்கி நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், விசாரித்ததில் 2 நாட்களிலேயே தனது காரை வாங்கிய நபர் வேறு ஒருவரிடம் அதை கொடுத்திருந்ததும் தெரியவந்ததாக புகாரில் அகமது கூறியிருந்தார்.

விசாரணை நடத்திய போலீசார், ஒரு இந்தியர் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் இதுபோல போலி செக்குகள் மூலம், 21 கார்களை வாங்கி விற்றிருப்பது தெரியவந்தது. கைதானவர்கள் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

English summary
An Indian national was among five persons arrested in Dubai for fraudulently buying cars using bogus cheques and selling them at higher prices. They used to purchase secondhand cars over weekends by making payments in dud cheques and sell them at higher prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X