For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து தேர்தலில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனக் வெற்றி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ரிச்மாண்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவின் கணவர் ரிஷி சுனக். 35 வயதாகும் இவர் அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ, படித்துள்ளார்.

Infosys founder Narayan Murthy's son-in-law Rishi Sunak

இங்கிலாந்து வாழ் சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி டிக்கெட் வழங்கியது. இந்தியரான ரிஷி சுனக் வடக்கு யார்க்ஷயரில் உள்ள இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்கின் ரிச்மாண்ட் தொகுதியில் போட்டியிட்டார்.

பிரசாரத்தின் போதே தான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். உலகின் சிறப்பான ஒரு பகுதியில், வில்லியம் ஹேக்கின் பாதச்சுவடுகளை பின்பற்றும் விதத்தில், நான் பிரதிநிதித்துவம் அளிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதை நம்ப முடியாத சலுகையாக கருதுகிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ரிச்மாண்ட் தொகுதியில் போட்டியிட்ட ரிஷி சுனக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ரிஷி சுனக் 51 சதவிகித வாக்குகள் பெற்றார் அவர் பெற்ற வாக்குகள் 27,744. அவரை எதிர்த்து போட்டியிட்ட மேத்யூ குக் யுகே இன்டிபென்டட் பார்ட்டி வேட்பாளர் 8,194 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

English summary
Infosys founder Narayan Murthy's son-in-law Rishi Sunak, a Conservative candidate, wins from Richmond (Yorks)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X