தோனியை உடனே பார்க்கணும்.. பயிற்சிக்கு இடையே அவசர அவசரமாக கேட்ட சாக்சி.. அடுத்து நடந்த சம்பவம்!
தோனியை பார்க்க வேண்டும் என்று சாக்சி தோனி வைத்த கோர்க்க இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
அபுதாபி: சிஎஸ்கே கேப்டன் தோனியை பார்க்க வேண்டும் என்று சாக்சி வைத்த கோரிக்கை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
சென்னை அணி வீரர்கள் நாளை நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள். அபுதாபியில் இவர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை ஐபிஎல் தொடரில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே இரண்டு பெரிய அணிகள் மோதுவதால், இப்போதே பரபரப்பு கூடியுள்ளது.

சென்னை போட்டி
கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ளது. இதனால் இந்த தொடரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயோ பம்பில் என்ற முறை இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வீரர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும். இவர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பே அவர்கள் அணியில் இடம்பெறுவார்கள்.

பாதி வீரர்கள்
ஐபிஎல் தொடரில் பாதியில் வந்து வீரர்கள் இணையும் போதும் இதேபோல் விதி கடைபிடிக்கப்படும். இதற்காக வீரர்கள் தங்கும் ஹோட்டல் அறைகளும் தனி தனியாக சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் உடன் அவர்களின் குடும்பத்தினர் வரவும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

என்ன கட்டுப்பாடு
கிரிக்கெட் வீரர்கள் உடன் அவர்களின் குடும்பத்தினர் தங்க வேண்டும் என்றால், அவர்கள் எல்லோரும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். அதன்பின் தங்களை தனிமைப்படுத்த வேண்டும். பின் இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவர்களுக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும். இதன் பின்பே அவர்கள் வீரர்கள் உடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் என்ன
ஆனால் இந்த குடும்பத்தினர், அந்த குறிப்பிட்ட வீரரை தவிர வேறு வீரர்களை சந்திக்க முடியாது. இந்த நிலையில்தான அபுதாபியில் இருக்கும் தோனியை உடனே சந்திக்க வேண்டும் என்று அவரின் மனைவி சாக்சி கோரிக்கையே வைத்து இருக்கிறார். அபுதாபியில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அணியின் நிர்வாகி ரசல் ராதாகிருஷ்ணன் இன்ஸ்டிராகிராமில் லைவ் செய்துள்ளார்.

லைவ் செய்தார்
சென்னை வீரர்கள் பயிற்சி செய்வதை ரசல் லைவ் செய்து இருக்கிறார். அதில் கமெண்ட் செய்த சாக்சி, எனக்கு உடனே தோனியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசல் தனது கேமராவை தோனியை நோக்கி திருப்பி இருக்கிறார். வீடியோவில் தோனியை பார்த்ததும் வெக்கப்படும் ஸ்மைலியை சாக்சி அனுப்பினார். அதன்பின் நான் அவரை பார்த்துவிட்டேன்.

நன்றி என்றார்
அவரை காட்டியதற்கு நன்றி என்று சாக்சி கூறினார். பொதுவாக தோனி பயிற்சிக்கு செல்லும் போது, தனது மனைவியை கூட்டி செல்வார். ஆனால் கொரோனா என்பதால் தற்போது நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது. இதனால் இந்த முறை மைதானத்தில் வீரர்களின் குடும்பத்தினர் இடம்பெறுவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications