அடிமடியில் கைவைக்கும் ஈரான்.. அடுத்த டார்கெட் அமெரிக்க ஐடி நிறுவனங்கள்? ஈரான் வெளியிட்ட பகீர் லிஸ்ட்
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கலைந்தபாடில்லை. 'ஏவுகணை மழை' பொழிந்த காலம் போய், இப்போது 'கட்டமைப்பு போர்' (Infrastructure War) என்ற புதிய அத்தியாயத்தை ஈரான் கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப ரீதியாக உயிர்நாடியாக இருக்கும் அமெரிக்காவின் முன்னணி ஐடி நிறுவனங்களை தங்களது 'புதிய இலக்குகளாக' அறிவித்து அதிரடி கிளப்பியுள்ளது ஈரான்.

என்ன நடக்கிறது?
ஈரானின் புரட்சிகர காவல்படைக்கு (IRGC) நெருக்கமான 'தஸ்னிம்' (Tasnim) செய்தி நிறுவனம் அண்மையில் ஒரு விரிவான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேலிய ராணுவத்துடன் கைகோர்த்துச் செயல்படும் அமெரிக்க டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் தரவு மையங்கள் (Data Centers) எவை என்பதைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளது.
"இனி போர் என்பது வெறும் எல்லைகளோடு நின்றுவிடாது; இது ஒரு உள்கட்டமைப்புக்கான போர்," எனத் தெரிவித்துள்ள ஈரான், இஸ்ரேலுக்கு ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் உளவுத் தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்கு நியாயமான இலக்குகளே (Legitimate Targets) என எச்சரித்துள்ளது.
ஈரானின் ஹிட் லிஸ்டில் இருக்கும் ஜாம்பவான்கள்:
ஈரான் வெளியிட்டுள்ள இந்த 'டார்கெட்' பட்டியலில் உலகையே ஆளும் சில முக்கியமான நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன:
கூகுள் & மைக்ரோசாஃப்ட்: இஸ்ரேலிய அரசுடன் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள 'நிம்பஸ்' (Project Nimbus) போன்ற கிளவுட் ஒப்பந்தங்கள் ஈரானின் முக்கிய கோபத்திற்கு காரணம்.
என்விடியா (Nvidia): ராணுவத் தளவாடங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாடுகளுக்கு இந்த நிறுவனத்தின் சிப்கள் பயன்படுத்தப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
பாலண்டீர் (Palantir): உளவுத்துறை மற்றும் போர் வியூகங்களை வகுக்கும் தரவு பகுப்பாய்வில் (Data Analytics) இந்நிறுவனம் இஸ்ரேலுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎம் & ஆரக்கிள் (IBM & Oracle): இவர்களின் கிளவுட் சர்வர்கள் மற்றும் தரவு சேமிப்பு மையங்களும் ஈரானின் ரேடாரில் சிக்கியுள்ளன.
வளைகுடா நாடுகளுக்கும் எச்சரிக்கை?
இந்த விவகாரத்தில் ஈரான் ஒரு படி மேலே போய், இஸ்ரேலில் உள்ள அலுவலகங்களை மட்டும் சுட்டிக்காட்டாமல், சில வளைகுடா நாடுகளிலும் (Gulf Countries) அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. இது அந்தந்த நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
"எங்கள் எதிரிக்குத் தொழில்நுட்ப ரீதியாகத் துணை நிற்கும் எவரும் தப்ப முடியாது" என்பதே ஈரான் சொல்ல வரும் செய்தி. இதனால் இனி வரும் நாட்களில் சைபர் தாக்குதல்கள் மட்டுமின்றி, நேரடியாக இந்த நிறுவனங்களின் முக்கிய மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் உலகளாவிய சந்தையில் எதிரொலிக்கிறது.
விளைவுகள் என்னவாகும்?
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் தொழில்நுட்பப் பாதுகாப்பு குறித்துப் பெரும் விவாதம் எழுந்துள்ளது. ஒருவேளை ஈரான் தனது எச்சரிக்கையைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால், அது உலகளாவிய கிளவுட் சேவைகள் மற்றும் தரவுப் பாதுகாப்பில் பெரும் சரிவை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கின் இந்த அதிகாரப் போட்டி, இப்போது சிலிக்கான் வேலி வரை நீண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இதற்கு எப்படி எதிர்வினையாற்றப் போகின்றன? வாஷிங்டன் இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications