For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொசூல் நகரில் 1,800 ஆண்டு கால தேவாலயத்தை எரித்த ஐ.எஸ்.ஐ.எஸ்.!

By Mathi
Google Oneindia Tamil News

மொசூல்: ஈராக்கின் மொசூல் நகரில் 1,800 ஆண்டு கால பழமையான தேவாலயத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுத படையான ஐ.எஸ்.ஐ.எஸ். எரித்து தீக்கிரையாகி உள்ளது.

ISIS burns 1,800-year-old church in Mosul

ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரை சன்னி முஸ்லிம்களின் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ். நடத்தி வருகிறது. ஈராக்கின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றிய சன்னி முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களையும் நிர்மூலமாக்கினர்.

இதனைத் தொடர்ந்து மொசூல் நகரில் இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒன்று இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும்; அல்லது சிறப்பு வரி செலுத்த வேண்டும்.. இரண்டும் செய்யாவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் மொசூல் நகரில் இருந்த 1,800 ஆண்டுகால பழமையான தேவாலயத்தை ஐ.எஸ்.எஸ்.ஐ. தீவிரவாதிகள் தீக்கிரையாக்கிவிட்டனர். இந்த காட்சி யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
Militants from the radical jihadist group the Islamic State of Iraq and Syria have set fire to a 1,800-year-old church in Iraq’s second largest city of Mosul, a photo released Saturday shows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X