ஈரான் மீது கொடூர தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. தலைநகரில் சரமாரி ‘அட்டாக்'.. வெடிக்கும் பெரிய போர்?
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று இன்று இஸ்ரேல், ஈரானை குறிவைத்து சரமாரியாக தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஈரான் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்துள்ளன. டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஈரானின் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலை இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதி செய்துள்ளார்.
உறுதி செய்த இஸ்ரேல்
இதுபற்றி அவர், ''ஈரானுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் முன்கூட்டிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
பிரச்சனையின் பின்ணனி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யூத நாடாக இஸ்ரேல் உள்ளது. இதனை சுற்றி உள்ள அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாகும். இதனால் இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாலஸ்தீனத்துடன் காசா பிரச்சனை உள்ளது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினர். இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையில் போரை தொடங்கியது. ஹமாஸ் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் தீர்த்து கட்டியது.
12 நாள் போருக்கு பின்...
அதேபோல் இன்னொரு அண்டை நாடான லெபனானில் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியது. அதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து முக்கிய தலைவர்களை தீர்த்து கட்டியது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் ஈரான் ஆதரவு அமைப்புகள். இதனால் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பகை உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஈரான் - இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது. காசா போரை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் போர் விமானங்களில் ஈரானுக்குள் நுழைந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்காவும் நுழைந்தது. நட்பு நாடான இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும், ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அணுஆயுதம் தயாரிப்பு
ஈரான் அணுஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படும். இதையடுத்து தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து கடந்த ஆண்டு ஈரானை தாக்கியது. அதன்பிறகும் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்த வேண்டும். இதற்கான யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். டீலுக்கு அழைத்த டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பாக ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
உடன்பாட்டில் இழுபறி
3 கட்டங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் கூட சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கோபமான டிரம்ப், ஈரான் உடனடியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பேரழிவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதோடு, ஈரானை சுற்றி போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்தார். இதனால் பதற்றம் அதிகரித்தது.
டிரம்பின் இந்த செயலால் டென்ஷனான ஈரான், ''அமெரிக்கா எங்களை தாக்கினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் வான்வெளி பகுதிகளை நாங்கள் தாக்கி அழிப்போம். அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலையும் தாக்குவோம்'' என்று வார்னிங் செய்தது. இதனால் கோபத்தின் உச்சத்துக்கு போன இஸ்ரேல் இன்று முன்கூட்டியே ஈரானை தாக்கி உள்ளது .
அமெரிக்கா அட்டாக்
மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்கா களமிறங்கி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஈரானை குறிவைத்து தாக்குகிறது. இதனால் இன்னொரு பெரிய போர் வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பே அமெரிக்கா, ஈரானை தாக்கலாம். இந்த முறை ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது பெரிய போராக இருக்கும். பல வாரங்கள் வரை போர் நீடிக்கும் என்று டிரம்பின் ஆலோசகர்கள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இதனால் தற்போது ஈரானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்!












Click it and Unblock the Notifications