For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலாவுக்கே போய் குடும்பத்தோட நிலாச்சோறு சாப்பிடலாம் - 2017ம் ஆண்டில்!

Google Oneindia Tamil News

டெல் அவிவ் : மொட்டை மாடியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட காலம் போய், தற்போது நேரடியாக நிலாவிலேயே சென்று நிலாச்சோறு சாப்பிட அழைக்கின்றது இஸ்ரேல்.

2017ம் ஆண்டிலேயே இந்தக் கனவு நிறைவேறும் என்றும் இஸ்ரேல் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.நிலாவைக் காட்டி சோறு ஊட்டியவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் உள்ளது இந்த செய்தி.

Israel could send the first privately funded mission to the Moon

1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது.

அதன் பிறகு, குடியேற வேண்டாம், சும்மா ஜாலியாக சுற்றி வரலாம் என்று திட்டம் போட்டார்கள். அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின், இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது.

மக்களுக்கும் நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

நிலாவிற்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இந்த நிலா பயணத்திற்காக தனது பால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தவுள்ளது.

பால்கன் 9 வகை ராக்கெட் இதுவரை சந்தித்து வந்துள்ள இடர்பாடுகளை சரி செய்து 2017 ஆம் ஆண்டு இறுதியில் நிலாவிற்கு பயணம் மேற்கொண்டு, சில மாதங்களில் பாதுகாப்பாக பூமியை வந்தடையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

English summary
Israeli nonprofit competing will use SpaceX’s Falcon 9 rocket to launch its lunar lander into space, the group announced today in Jerusalem. The rocket will launch the team's vehicle into lower Earth orbit sometime in the second half of 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X