For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேம்ஸ் பாண்டாக வலம் வந்து ரசிகர்களை அசத்திய 'ரோஜர் மூர்' !

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: பிரபல ஜேம்ஸ் பாண்ட் 007 புகழ் நடிகரான ரோஜர் மூர் 89) இன்று மரணமடைந்தார்.

உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதில் ஒவ்வொரு காலக்கட்டங்களில் புதிது புதிதாக நாயகர்கள் உருவாகி, ரசிகர்கள் மனதில் இடம்பெறுவர். அவர்களில் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நாயகனாக இருந்தவர் நடிகர் ரோஜர் மூர்.

 "James Bond," Roger Moore dies at 89

சர் ரோஜர் மூர் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். லண்டனில் பிறந்தவர். அப்பா போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் லட்சியம். ஆனால் கடைசியில் ஓவியராகி பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார் ரோஜர் மூர்.

அதுவும் சிறுதி காலமே நிலைத்தது. பின்னர் புகைப்படக் கலைஞரான தனது நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனால் அதிலும் பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள். மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை வந்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார் ரோஜர். முதலில் வீதி நாடகங்கள், டிவி தொடர்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது.

அதன் பின்னர் 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். 'டிராயிங் ரூம் டிடெக்டிவ்', 'தி செயின்ட்' ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின டிவி சீரியல்கள்.

ஒருவழியாக 46 வயதில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்து. 1973-ல் வெளிவந்த 'லிவ் அண்ட் லெட் டை' திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார் ரோஜர் மூர்.1985 வரை 'ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி', 'ஏ வியூ டு எ கில்' உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே சாம்பவான் என்ற பெயர் எடுத்தார் ரோஜர்.

படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்தது.
ஜூனியர் ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடித்த படத்தில் வில்லனாக நடிப்பது இவரது தீராத ஆசை.

டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் எழுதுவது என்று 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த முன்னாள் 007, தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை என்று கூறுவது வியப்புக்குரியது. தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். எல்லாவற்றையும்விட இந்த பணியே மிகுந்த மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார்.

நான் நிஜத்திலும் பாண்ட் மாதிரிதான். படு ஜாலியான பேர்வழி. என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. ஹீரோதான். மேலும் நான் பாண்ட் போல வீராதி வீரனும் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.

English summary
Legendary actor, Roger Moore who played James Bond has died at 89. His family announced that the actor passed away after a brief battle with cancer. A message on the actor's official twitter account read
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X