தள்ளாடும் ஜப்பான்.. நிலைமையை சரி செய்வாரா புதிய பிரதமர்? இன்று தேர்தல்! தாய்லாந்திலும் இதே நிலைதான்
டோக்கியோ: ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளின் அரசியல் எதிர்காலத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்குத் தீர்மானிக்கும் நோக்கில், இன்று இரு நாடுகளிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பானில் தற்போது அரசியல் தலைமை நிலையற்றதாக மாறியிருக்கிறது. இந்த தேர்தல் மூலம் நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில், பிரதமர் சனே டக்காயிச்சி சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த பொதுத் தேர்தல், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். தற்போதைய அரசாங்கம் தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும், அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தவும் இத்தேர்தலில் தன்னை நிரூபிக்க வேண்டும்.

ஜப்பானை பொறுத்தவரை, கடந்த 1966க்கு பின்னர் அரசியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான செல்வாக்கு அதிகரிக்கும்போது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவார்கள். அதாவது அவர்களது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள்தான் இருக்கும். ஆனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பது தெரிந்தால், உடனே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் அறிவிக்கப்படும்.
இப்படி செய்வதன் மூலம் அவர்களுடைய ஆட்சி காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இப்படி செய்வது உண்மையான தேர்தலை எதிர்கொள்ள பயப்படுவதற்கு சமம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. இருப்பினும் ஆட்சியாளர்கள் இதெல்லாம் கண்டுக்கொள்வது கிடையாது. அதே பாணியில்தான் தற்போது சனே டக்காயிச்சியும் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்திருக்கிறார்.
இவர் கடந்த ஆண்டு அக்டோபரில்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய திட்டங்களை அறிவித்து பிரச்சனைகளை தீர்ப்பார் என்று பார்த்தால், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை கொண்டு வந்திருக்கிறார். எனவே இந்த தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரும், நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பிரதமர் டக்காயிச்சி, இந்தத் தேர்தல் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
தாய்லாந்தின் அரசியல்
இன்று தாய்லாந்திலும் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தாய்லாந்தில் 500 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்தும் இன்று ஒரே நாளில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
தாய்லாந்தின் அரசியல் களம் பல ஆண்டுகளாக சில குடும்பங்களாலும், அவற்றைச் சேர்ந்த தனிநபர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களும் அவற்றின் வலைப்பின்னல்களும் நாட்டின் நவீன வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ளன. இதுவே பெரும்பாலான வாக்காளர்களைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியப் பிரச்சினையாக இருக்கும்.
தற்போதைய காபந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், எல்லைப் பகுதிகளில் கம்போடியாவுடன் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து தேசியவாத உணர்வைத் தூண்டி இவர் பிரசாரம் செய்துள்ளார். அதேபோல சீர்திருத்த கட்சி இளைய தலைமுறையினரின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் இக்கட்சி முன்னிலை வகிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications