"சூப்பர் மெஜாரிட்டி.." ஜப்பானில் கிளீன் ஸ்வீப் வெற்றி.. மொத்தமாக அள்ளிய சானே தகைச்சி.. மோடி வாழ்த்து
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இன்று பொதுத் தேர்தல் நடந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி சூப்பர் மெஜாரிட்டியை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார். அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை பிரதமராக இருந்தவர் எல்டிபி கட்சியின் ஷிகெரு இஷிபா. இருப்பினும், இரு முக்கிய தேர்தல்களில் எல்டிபி கட்சி தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலகினார். இதையடுத்து அக்டோபர் 2025-இல் சானே தகைச்சி பிரதமராகப் பதவியேற்றார்.

ஜப்பான் தேர்தல்
இருப்பினும், அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, தனது கொள்கைகளுக்கும் மக்களிடம் நேரடி அங்கீகாரம் பெற அவர் விரும்பினார். அதற்காக அங்குள்ள கீழ் சபைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிப்ரவரி 8ம் தேதி அங்குத் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. முந்தைய தலைவர்களால் எல்டிபி கட்சிக்குப் பெற முடியாத வெற்றியை சானே தகைச்சி பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். அவரது வெற்றிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி வாழ்த்து
இதற்கிடையே ஜப்பான் தேர்தலில் வென்ற சனே டகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா- ஜப்பான் இடையேயான உறவு உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது என்று அவர் கூறினார். சனே டகைச்சிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சனே டகைச்சி! இந்தியா ஜப்பான் இடையேயான சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை, இந்தியா ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மிகப் பெரிய வெற்றி
ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில், சனே டகைச்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அவரது லிபரல் டெமாக்ரடிக் கட்சி (எல்.டி.பி) ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உள்ள கீழ் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியது. 465 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டி வென்றது.
ஏன் முக்கியம்
அவர்கள் கட்சி 310 இடங்களில் வென்றது. இதன் மூலம் எல்டிபி கட்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி கிடைத்துள்ளது. சூப்பர் மெஜாரிட்டி இருப்பதால் எல்டிபி கட்சியால் மேல்சபை முடிவுகளைக் கூட மாற்றி அமைக்க முடியும். மேல்சபையில் எல்டிபி கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் இருந்த சூழலில், சில சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அந்தச் சிக்கலும் முழுமையாக நீக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய டகைச்சி, தனது கொள்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக ஜப்பான் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கத் தொடங்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications