ஜப்பான் நிலநடுக்கம்.. 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. 2 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்!
டோக்கியோ: ஜப்பானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். அங்கு அறிவிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிக்டர் அளவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டோக்கியோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதே சமயம் டோக்கியோவில் நிலநடுக்கம் காரணமாக கடுமையான மின்தடை ஏற்பட்டது.

2 பேர் பலி
கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு உள்ளனர். 2011ல் இதே புகுஷிமா கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே இது வடக்கு ஜப்பான் பகுதியில் இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியானார்கள். 97 பேர் காயம் அடைந்தனர்.

மின்சாரம்
2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அப்போது அந்த நிலநடுக்கம், சுனாமி, புகுஷிமா அணு உலை கசிவு காரணமாக 20 ஆயிரம் பேர் மொத்தமாக பலியானார்கள். ஆனால் இந்த முறை சுனாமி ஏற்படாத நிலையில் ஜப்பானில் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மொத்தம் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் தடை பெற்றது. டோக்கியோவில் மட்டும் 7 லட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணு உலை
இதனால் கிழக்கு ஜப்பான் பகுதியில் பல்வேறு சிறிய குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஆனாலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு அணு உலைகள் எதுவும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்படவில்லை. புகுஷிமாவில் பாதிக்கப்பட்ட அணு உலையில் மட்டும் நிலநடுக்கத்தை தொடர்ந்து அபாய ஒலி ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அங்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏன் வருகிறது
இன்னொரு பக்கம் ஜெபம்பனில் ஷான்கேசன் என்று பகுதியில் புல்லட் ரயில் தடம் புரண்டது. புல்லட் ரயில் நகர்ந்து கொண்டு இருக்கும் போதே திடீரென அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் புல்லட் ரயில் 100 பயணிகளோடு தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பலியாகவில்லை. அதேபோல் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஜப்பான் பசிபிக் கடலில் "ring of fire" எனப்படும் அதிக அளவிலான பூமி தகடு அதிர்வு ஏற்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications