உலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்!

Posted By: Jaya chitra
Subscribe to Oneindia Tamil
  உலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா-வீடியோ

  டோக்கியோ: உலகில் வாழ்ந்து வருபவர்களிலேயே அதிக வயதான ஆணாக ஜப்பானைச் சேர்ந்த மசாஸோ என்ற 112 வயது தாத்தா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

  உலகில் அதிககாலம் வாழ்ந்து வரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்து வரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது.

  அதன் அடிப்படையில், பிரான்ஸைச் சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண் மிக அதிக காலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். கடந்த 1997ம் ஆண்டு மரணமடைந்த ஜீயென்னி, 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்தவர் ஆவார்.

  அவரைத் தொடர்ந்து ஜிரோய்மோன் கிமுரா என்பவர் மிக அதிக காலம் வாழ்ந்தவராக அடையாளம் காணப்பட்டார். அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு கிமுரா காலமானார். இவரும் ஜப்பானைச் சேர்ந்தவர் தான்.

  அவருக்கு பின் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா தனது 113 வயதில் இந்தாண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.

  ஜப்பான் தாத்தா:

  ஜப்பான் தாத்தா:

  ஒலிவேராவின் மரணத்தைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா, உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக உள்ளார். தற்போது 112 வயதாகும் அவரை, அதிக வயதான ஆண் மகனாக கின்னஸ் நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.

  தீவில் பிறந்தவர்:

  தீவில் பிறந்தவர்:

  கடந்த 1905ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் பிறந்தவர் மசாஸோ. அவருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆவார்.

  ஸ்பா:

  ஸ்பா:

  இளம்வயதில் விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் ஸ்பா நடத்தினார். கடந்த 1931ம் ஆண்டு ஹேட்சுனா என்பவருடன் மசாஸோவுக்கு திருமணம் ஆனது. இந்தத் தம்பதிக்கு இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தற்போது மகன், மகள், பேரன், பேத்திகள் என அனைவருடனும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் மசாஸோ.

  விருப்ப உணவுகள்:

  விருப்ப உணவுகள்:

  இனிப்பு மற்றும் கேக் வகைகள் தான் மசாஸோவின் விருப்ப உணவுகளாம். அதோடு அடிக்கடி ஹாட் பாத் எனப்படும் சுடுநீர் குளியலும் எடுத்துக் கொள்வாராம். இதுவே அவரது நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

  வீல் சேர் வாசம்:

  வீல் சேர் வாசம்:

  ஆரோக்கியமாக இருந்தாலும், மசாஸோ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கு வீல் சேரைப் பயன்படுத்தி வருகிறார். மற்றபடி அனைவரையும் அவரால் அடையாளம் காண முடிகிறதாம். நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள் படிப்பது மசாஸோவின் விருப்பமாம்.

  அதிக வயதானவர்கள்;

  அதிக வயதானவர்கள்;

  வயதானவர்கள் அதிகமாகக் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு அரசு கடந்தாண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, அங்கு சுமார் 68 ஆயிரம் பேர் 100 மற்றும் அதனைத் தாண்டிய வயதுள்ளவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  வயதானவர்கள் அதிகமாகக் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு அரசு கடந்தாண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, அங்கு சுமார் 68 ஆயிரம் பேர் 100 மற்றும் அதனைத் தாண்டிய வயதுள்ளவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Masazo Nonaka from Japan was recognised Tuesday as the world's oldest man at the ripe old age of 112, as his family revealed his secret: sweets and hot baths.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற