ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது
இஸ்தான்புல்: ஈரான் மீது, அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. இப்படி இருக்கையில், துருக்கியிலிருந்து, ஈரான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் செல்லவிருந்த விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டன. துருக்கி ஏர்லைன்ஸ் மற்றும் இரண்டு ஈரானிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இஸ்தான்புல் விமான நிலையம் அறிவித்தது.

சனிக்கிழமைக்கான 4 தெஹ்ரான் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. எனினும், மேலும் 6 தெஹ்ரான் விமானங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. வட ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரத்துக்குச் செல்லவிருந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானமும் நாளை ரத்து இயக்கப்படாது என அறவிகிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில் என்ன நடந்தது என்பது குறித்து துருக்கி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை எந்தக் கருத்தையும் கூறவில்லை. இஸ்லாமியக் குடியரசான ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்த நாடுகளுடன் இணைந்துகொள்ளவும் அவர்கள் மறுத்துவிட்டனர். துருக்கி, 550 கிலோமீட்டர் (340 மைல்) நீளமுள்ள ஈரானின் எல்லையை 3 முக்கிய கடக்கும் வழிகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
சமீபத்தில் ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் பேசியிருந்தார். அதில், ஈரானுடன் நடந்த உரையாடலில் திருப்தி இல்லை. இந்த உரையாடல் என்னை மகிழ்ச்சியடைய வைக்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது ஈரானை சுற்றி அமெரிக்காவின் 2 சக்தி வாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களும், அதற்கு சப்போர்ட்டாக சிறிய தாக்குதல் கப்பல்களும் இருக்கின்றன.
அதேபோல இஸ்ரேலில் அமெரிக்காவின் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிககா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
-
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க












Click it and Unblock the Notifications