தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ்! தங்க கவுனில் பார்வையாளர்களை கவர்ந்த இந்தியர் மணிகா! யார் இவர்?
பாங்காங்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி 2025 போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி மணிகா விஸ்வகர்மா என்பவர் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் இவர் அணிந்திருந்த ஆடை புத்த மத பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்தது.

தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் 74 ஆவது மிஸ் யுனிவர்ஸ் உலக போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா என்பவர் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய இறுதி போட்டியில் இவர் இந்திய அழகி பட்டத்தை வென்றார்.
22 வயதாகும் இவர் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இவரது ஆளுமையும் தன்னம்பிக்கையும் நேர்த்தியும் அனைவரையும் கவர்ந்தது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் பட்டங்களை படித்து வருகிறார்.
இவர் நடனக் கலைஞரும் ஆவார். தனது சமூகவலை பக்கத்தில் உடற்பயிற்சி, அவர் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள், அழகி போட்டிக்கு தயாராகும் யுத்திகள் குறித்து விவரித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபஞ்ச அழகி பட்டம் பெறுவதற்கான போட்டியில் மணிகா கலந்து கொண்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி அவரவர் நாட்டின் பாரம்பரிய உடை அணியும் நிகழ்வு நடந்தது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா அவரது மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான ஆடையை அணிந்திருந்தார்.
அந்த நிகழ்வில் தங்க நிறத்தில் அழகிய ஆடையை அணிந்திருந்தார். இந்திய பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான அந்த கவுன் பார்வையாளர்களை கவர்ந்தது. போதி மரத்தின் அடியில் புத்தர் ஞானம் பெற்றதை விவரிக்கும் வகையில் அவரது ஆடை முக்கியத்தவம் பெற்றிருந்தது.
இந்தியாவின் செல்வச் செழிப்பு, வளம், ஆற்றல் உள்ளிட்டவைகளை பிரதிபலிக்கும் நோக்கில் தங்கம் நிறமான பிரதிபலித்தது. மணிகா தலையில் மிக பெரிய கிரீடத்தை வைத்திருந்தார்.
அது போல் கழுத்தில் நகைகள், காதில் தோடு உள்ளிட்டவை தங்க நிறத்தில் ஜொலித்தன. மணிகா, இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்களாக உள்ளது. இதன் இறுதி போட்டி நாளை தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்திய நேரத்தில் காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications