For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியைவிட பலமடங்கு பெரிய கோள் “கெப்ளர்-10 சி”- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான "கெப்ளர்-10 சி" என்ற புதிய கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது, 1 ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல் தொலைவு ஆகும்.இந்த புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும்.

Mega-Earth is a huge, rocky new kind of planet

இந்த கோளை கண்டுபிடித்திருப்பது குறித்து ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் பவுதிக மையத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி சேவியர் னடஸ்கியூ கூறுகையில், "இந்தக் கோளை நாங்கள் கண்டுபிடித்திருப்பது எங்களுக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது" என்றார்.

மற்றொரு விஞ்ஞானியான டிமிட்டர் சாஸ்செலோவ் கூறும்போது, " இது அனைத்து பூமிகளின் "காட்சில்லா" போன்றது. இந்த கோளில் உயிர்வாழ்வதற்கு சாதகமான அம்சங்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.மேலும், இந்தக் கோள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

English summary
Astronomers have discovered a new type of rocky planet beyond the solar system that weighs more than 17 times as much as Earth while having just twice the diameter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X