பெயிண்ட் பிரஷ்க்கு குட்பை சொல்கிறது மைக்ரோசாஃப்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பெயிண்ட் பிரஷ் கிராபிக்ஸ் அப்ளிகேஷனை மூட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெயிண்ட் அப்ளிகேஷன் படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் இந்த பெயிண்ட் கிராபிக்ஸ் அப்ளிகேஷனை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 மாடல்களில் பெயிண்ட் பிரஷ் அப்ளிகேஷன்கள் இடம்பெறவில்லை.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

இதற்குப் பதில் பெயிண்ட் 3டி என்ற புதிய ஆப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இணைக்கவுள்ளது. இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டிவிட்டரில் கருத்து

டிவிட்டரில் கருத்து

இதுகுறித்து டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறுவயதில் பலர் பெயிண்ட் பிரஷ் அப்ளிகேஷனில் படங்களை வரைந்து அவற்றை பத்திரமாக சேவ் செய்து வைத்திருந்திருப்போம்.

ஆனால் இனி வரும் காலங்களில் பெயிண்ட் பிரண் ஆப் இருக்காது என்பது அதனை பயன்படுத்தியவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெயிண்ட் பிரஷ் ஆத்மா சாந்தியடையட்டும் என வரைந்து, அந்த படங்களை மக்கள் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

எங்களின் குழந்தை பருவங்கள்..

ஆத்மா சாந்தியடையட்டும்.. எங்களின் குழந்தை பருவங்கள்.. என கூறுகிறது இந்த டிவீட்

பெயிண்ட் இறந்துவிட்டதாக

பெயிண்ட் இறந்துவிட்டதாக கூறுகிறது இந்த டிவீட்..

மீண்டும் வரையுங்கள்

எப்போது வேலையில்லாமல் இருக்கிறீர்களோ அப்போது நீங்கள் வரைந்த காட்சிகளை மீண்டும் வரையுங்கள் என்கிறது இந்த டிவீட்..

பெயிண்ட் 3டியில்

பெயிண்ட் 3டியில் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறது இந்த டிவீட்

Bill and Melinda Gates NGO under watch

இன்னும் விரும்புகிறோம்

நாங்கள் இன்னும் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட்டை விரும்புகிறோம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிவிட்டியுள்ளது

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Microsoft painting program going to erase after 32 years. Long-standing basic graphics editing program, used throughout childhoods since the 1980s, has been marked for death.
Please Wait while comments are loading...