பார்க்காமலேயே டிரம்பின் உண்மை நண்பரானார் மோடி.. டுவிட்டரில் அசத்திய அமெரிக்க அதிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அரசுமுறை பயணமாக அமெரிக்க உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை புறப்பட்டார்.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா விருந்தளித்தார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்தும் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அமெரிக்க பயணம்

அமெரிக்க பயணம்

இதனைத்தொடர்ந்து மோடி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

ஆவலோடு டிரம்ப்

ஆவலோடு டிரம்ப்

இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக் குறித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

உண்மை நண்பர்

மேலும், உண்மையான நண்பரான மோடியிடம் பல ராஜதந்திர விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருக்கிறார். ஆனால் நேரில் நாளைதான் சந்திக்கப் போகிறார்கள்.

உணவு விருந்து

உணவு விருந்து

உண்மையான நண்பர் மோடியை அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளார். அதற்கு பின்னர் மோடிக்கு இரவு விருந்து டிரம்ப் அளிக்கிறார். டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
“Look forward to welcoming India's PM Modi to at White House on Monday. Important strategic issues to discuss with a true friend!” said Donald Trumps on his twitter.
Please Wait while comments are loading...