For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்: சிறிசேனவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்; ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெற வில்லை.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க இந்தியா எதிர்பார்ப்பது இயற்கையானது. அதே நேரத்தில் இலங்கையின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது. இலங்கை விவகாரத்தில் நடுநிலையுடன் தீர்வு காணும் வழி கண்டறியப்படும் என்றார்.

English summary
Prime Minister Narendra Modi met the leaders of close neighbours Bhutan and Sri Lanka as well as of Cyprus and Sweden in separate back-to-back bilaterals here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X