For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது சும்மா ட்ரையலுதாம்மா.. மெயின் பிக்சர் இனிமேதான்... ட்ரம்பை எச்சரிக்கும் 'குழந்தை சாமி'

அமெரிக்கா செய்த எச்சரிக்கையையும் மீறி ஜப்பானை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தி ஆட்டம் காட்டியுள்ளது வடகொரியா.

By Devarajan
Google Oneindia Tamil News

சியோல்: ஜப்பானை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா, இன்னும் ஏவுகணைகள் சோதனைக்காக காத்துள்ளன என்று கூறி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பீதியை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஏவுகணையை விண்ணில் பாயவிட்ட வடகொரியா மீது தற்போது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா நேற்று நீண்ட தூர ஏவுகணையை சோதனை செய்தது. இது ஜப்பானை கடந்து சென்றது.

வடகொரியா சோதனை

வடகொரியா சோதனை

அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரிய ராணுவம் கடந்த மாதம் சோதனை செய்தது. இது அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கும் ஏவுகணைகள்

எச்சரிக்கும் ஏவுகணைகள்

இந்நிலையில் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வடகொரியா நேற்று சோதனை செய்தது. சுனான் என்ற பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை வானில் 550 கி.மீ உயரத்தில், 2,500 கி.மீ தூரம் பயணம் செய்து பசிபிக் கடலில் விழுந்தது. அப்போது அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவை கடந்து சென்றது.

அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்

அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்

இது குறித்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கூறுகையில், ' நம் நாட்டை கடந்து செல்லும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது, அத்துமீறிய செயல். இது மிகவும் அபாயகரமான அச்சுறுத்தல். நாம் நமது மக்களை பாதுகாக்க தேவையானதை செய்வோம்' என்றார்.

ட்ரம்ப் எச்சரிக்கை

ட்ரம்ப் எச்சரிக்கை

வடகொரியாவின் இந்த சோதனை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ' வடகொரியாவின் அத்துமீறல் குறித்து ஐ.நா சபையில் நாம் உடனடியாக ஆலோசித்து, வடகொரியா மீதான நெருக்கடியை அதிகரிக்க வேண்டும். இதில் அமெரிக்காவும், ஜப்பானும் உறுதியாக உள்ளது' என்று கூறினார்.

கிம் ஜோங்- உன்

கிம் ஜோங்- உன்

இந்த நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்- உன், 'இன்னும் நிறைய ஏவுகணைகள் மீதம் உள்ளன ஜப்பான் மேலே பறக்கவிட்டு சோதனை செய்ய' என்று அணுஆயுத நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே போல ஐ.நா.வுக்கும், அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

English summary
North Korea leader Kim Jong-Un said that they havew more missile flights over Japan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X