For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலூன், பாட்டில்மூடி.. கையளவு ஆமைக்குட்டியின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்.. இப்படியே போனால்..

அமெரிக்காவில் இறந்து போன ஆமைக்குட்டியின் வயிற்றில் இருந்து 104 பிளாஸ்டிக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன/

Google Oneindia Tamil News

Recommended Video

    கையளவு ஆமைக்குட்டியின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்..வீடியோ

    புளோரிடா: அமெரிக்காவில் இறந்து போன கடல் ஆமைக்குட்டியின் வயிற்றில் இருந்து நூறுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயங்கி வருகிறது கம்போ லிம்போ இயற்கை மையம். இந்த மையம் அமைந்துள்ள இடத்தின் அருகே இருந்து உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கடல் ஆமை கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது.

    more than 100 plastic pieces found in a baby turtle intestine

    உள்ளங்கை அளவே இருக்கும் அந்த ஆமையின் உயிரை காப்பாற்ற கம்போ லிம்போ இயற்கை மையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அந்த ஆமை இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த ஆமையின் வயிற்றை அறுத்து பார்த்தபோது, பலூன், பாட்டில் மூடி உள்ளிட்ட 104 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தது தெரியவந்தது.

    அட மக்கு திருடர்களா.. பையில 4 மலைப்பாம்பு இருக்கறது தெரியாம திருடிட்டு போய்ட்டீங்களே!அட மக்கு திருடர்களா.. பையில 4 மலைப்பாம்பு இருக்கறது தெரியாம திருடிட்டு போய்ட்டீங்களே!

    கடலில் நீந்தி வரும் போது, எதிரே தென்படும் பிளாஸ்டிக் பொருட்களை உணவு என நினைத்து ஆமைகள் முழுங்கிவிடுகின்றன. உள்ளே செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆமைகளின் வயிற்றை நிறைத்துவிடுகின்றன. இதனால் அவை வேறு எதையும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு, கரையோரம் ஒதுங்கி இறந்துவிடுகின்றன.

    கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த நிலை நீடித்தால் 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகள் தான் அதிகமாக இருக்கும் என ஐ.நா. சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A baby turtle that washed up in Boca Raton, Florida, died shortly after it was found by the Gumbo Limbo Nature Center last week. The loggerhead sea turtle was found with 104 pieces of plastic in its stomach that it ate while swimming in the ocean, reports Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X