For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாலிபான் தலைவர் முல்லா ஓமர் மரணம்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

காபூல்: தாலிபான் தீவிரவாத இயக்க தலைவர் முல்லா ஓமர் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனுக்கு பிறகு தாலிபான் இயக்க தலைவராக பொறுப்பு வகித்தவர் முல்லா ஓமர். அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி பல ஆண்டுகளாக அவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிப்பதற்கான தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி அளிக்கப்படுமென அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.

Mullah Omar dead?

இந்நிலையில், முல்லா ஓமர் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக இதற்கு முன்பும் பல முறை தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இப்போதுதான் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் இதனை உறுதிசெய்துள்ளன.

இதுகுறித்து தாலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த செய்திகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித்தொடர்பாளரிடம் கேட்டபோது, "முல்லா ஓமர் மரணம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி அறிவோம். அதை உறுதி செய்ய விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

முல்லா ஓமர் கொல்லப்பட்டாரா, அல்லது உடல் நலக்குறைவால் மரணமடைந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

English summary
The Supreme Coammander of the Taliban, Mullah Omar is dead according to the sources in the Afghanistan government. The BBC while quoting Afghan government sources has stated that Mullah Omar is dead. However there is no official statement as yet from the Taliban
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X