For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாசாவின் டிவிட்டர் பக்கத்தில் நுழைந்து ஆபாச போட்டோவை பதிவு செய்த ஹேக்கர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவின் டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள், அதில் ஆபாச புகைப்படத்தைப் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, கெப்ளர் மற்றும் கே2 என்ற டிவிட்டர் பக்கங்களைக் கையாண்டு வருகிறது. இதில் தங்களது நடவடிக்கைகளை, கண்டுபிடிப்புகளைப் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

NASA Kepler Twitter Account Hacked

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த கெப்ளர் டிவிட்டர் பக்கத்தை மர்மநபர்கள் ஹேக் செய்தனர். பின்னர் அதில் இருந்த செய்திகளை நீக்கிவிட்டு, அதில் ஆபாச புகைப்படத்தை பதிவேற்றம் செய்தனர். புரொபைல் போட்டோவில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்தனர்.

அதோடு அந்தப் பக்கத்தின் பெயரையும் r4die2oz என மாற்றினர். மேலும், அந்த டிவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்து லிங்க் கொடுத்துள்ளனர்.

இந்த மாற்றத்தைக் கண்டு நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செயல்பட்டு அந்த ஆபாச பதிவுகளை நீக்கி விட்டு, கெப்ளர் பக்கத்தை புதுப்பித்தனர்.

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டும் இதேபோல் நாசாவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது நினைவு கூறத்தக்கது.

English summary
The official Twitter account for NASA’s Kepler, which surveys parts of the Milky Way Galaxy in search for hospitable planets, just got hacked. It’s unclear how or why the account was hacked, but it definitely tweeted a butt and a sketchy link.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X