For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்வெளியில் தொலைதூரத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லும் ஓரியான் விண்வெளி ஓடம் தயார்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசாவின் ஓரியான் விண்வெளி ஓடம் சோதனை ஓட்டத்திற்குத் தயாராகியுள்ளது.

மனிதர்களை விண்வெளியில் தொலைதூரத்திற்குப் பயணிக்க வைக்கும் திறன் படைத்தது இந்த புதிய விண்வெளி ஓடம்.

டிசம்பர் மாதம் இந்த விண்வெளி ஓடம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தற்போது எரிபொருள் நிரப்பும் பணிக்காக இது காத்திருக்கிறது.

அதிநவீன விண்வெளி ஓடம்:

அதிநவீன விண்வெளி ஓடம்:

நாசா உருவாக்கியுள்ள அதி நவீன விண்வெளி ஓடமாகும் இது. தற்போது இது நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சோதனைகள் முடிந்து வெளியே வந்துள்ளது.

எரிபொருள் நிரப்புதல்:

எரிபொருள் நிரப்புதல்:

அடுத்து இந்த விண்வெளி ஓடத்தில் எரிபொருள் நிரப்பப்படவுள்ளது. டிசம்பரில் இந்த விண்வெளி ஓடம் தனது பயணத்தைத் தொடங்குகிறது.

கடினமான உருவாக்கம்:

கடினமான உருவாக்கம்:

இந்த விண்வெளி ஓடத்தை உருவாக்குவது எளிதாக இருக்கவில்லை. மிகவும் கடினமான பணி. ஆனால் நிச்சயம் இது மிகப் பெரிய சாதனையாக அமையும் என்று ஓரியான் திட்ட மேலாளர் மார்க் கெயர் தெரிவித்துள்ளார்.

ராக்கெட்டின் முன்னால் இணைப்பு:

ராக்கெட்டின் முன்னால் இணைப்பு:

வழக்கமான ராக்கெட்டின் முன்பகுதியில் இந்த விண்வெளி ஓடத்தை இணைத்து உருவாக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

மனிதர்களால் இயக்கம்:

மனிதர்களால் இயக்கம்:

இதில், புதிய பிரஷர் வாகனம், வெப்ப கவசத் தகடுகள், பாராசூட், ஏவியானிக்ஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இது விமானம் போலவே மனிதர்களால் இயக்கி பயன்படுத்தப்படும் என்பதுதான் விசேஷமானது.

3600 மைல் பயணம்:

3600 மைல் பயணம்:

தொடக்கத்தில் இது விண்வெளியில் 3600 மைல் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும். ஓரியானின் முதல் சோதனைப் பயணத்திற்கு Exploration Flight Test-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பயணம், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. டெல்டா 4 கன ரக ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்படும்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள்:

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள்:

எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நாசாவிடம் உள்ளது. அதற்கான முன்னோடிப் பயணமாக இதைக் கருதலாம்.

சோதனை ஓட்டம் இது:

சோதனை ஓட்டம் இது:

விண்வெளியில் இதுவரை மனிதர்கள் அதிக அளவில் செல்லமுடியாத தூரத்திற்கும் கூட இந்த விண்வெளி ஓடம் மூலம் பயணிக்கலாம். அதற்கான சோதனை ஓட்டம்தான் இது.

எதிர்கால திட்டம்:

எதிர்கால திட்டம்:

சோதனை ஓட்டத்தின்போது ஆட்கள் யாரும் இதில் செல்ல மாட்டார்கள். ஆனால் எதிர்காலத் திட்டங்களில் விண்வெளி வீரர்கள் இதில் பயணிப்பார்கள்.

English summary
NASA's Mars Curiosity rover has finally reached the Red Planet's Mount Sharp - a Mount-Rainier-size mountain at the centre of the vast Gale Crater and the rover mission's long-term prime destination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X