"பூமி"நாதனா மாற நாசா உங்களுக்கு ஒரு நல்ல சான்ஸ் தருது.. நீங்க ரெடியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமியைக் காக்கும் வேலை கிடைத்தால் எப்படி இருக்கும்.. ? போங்க பாஸ் ஜோக்கடிக்காதீங்கன்னு நீங்க இதைப் புறம் தள்ள முடியாது. உண்மையிலேயே அப்படி ஒரு வேலைக்கு ஆள் எடுக்கப் போகிறது நாசா.

அந்த "ஊர்க்காவலன்" வேலையோட பெயர் என்ன தெரியுமா.. கிரக (பூமி) பாதுகாப்பு அதிகாரி என்பதாகும். இந்த வேலைக்கு ஆள் தேவை என்று நாசா விளம்பரம் செய்துள்ளது.

சரி எதற்காக இந்த வேலை.. ? வேற்றுகிரகவாசிகளிடமிருந்து நம்மைக் காப்பதுதான் இந்த "ஆபீசரின்" முக்கியப் பணியாக இருக்குமாம். மேலும் பிற கிரகங்கள், விண் கப்பல்கள், செயற்கைக் கோள்களிலிருந்து பூமிக்கு ஆபத்து தரும் பொருட்கள் ஏதேனும் வந்தால் அதைத் தடுத்து பூமியைக் காப்பதும் இந்த அதிகாரியின் வேலையாக இருக்கும்.

இதுதவிர நாசாவின் விண்வெளித் திட்டங்களை பாதுகாப்பான முறையில் நிறைவேற்றுவதற்கும் கூட இந்த அதிகாரியின் ஆலோசனை பெறப்படுமாம். சுருக்கமாக சொன்னால் "டிரம்ப்"பை விட அதி முக்கியத்துவம் வாய்ந்தவராக இந்த "ஆபீசர்" இருப்பார் பாஸ்!

இதெல்லாம் தேவை

இதெல்லாம் தேவை

சரி பந்தயத்துக்கு நாங்க ரெடி என்று சூரி மாதிரி நீங்கள் மார் தட்டி எழுந்து நிற்பது தெரிகிறது. இந்த வேலைக்கான தகுதிகளாக நாசா அறிவித்துள்ளவை - பூமி பாதுகாப்பு குறித்த ஞானம் இருக்க வேண்டும். அமெரிக்க விண்வெளித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், தெளிவும் இருக்க வேண்டும். கடினமான சூழலில் திறமையாக செயல்பட்டு நஷ்டம் வராமல் பார்க்கும் திறமை தேவை. முக்கிய முடிவுகளை சட்டென எடுக்கும் சாதுரியம் அவசியம்.

கடலைமுத்து மாதிரி ஸ்ட்ரிக்ட்டா இருக்கனும்

ரொம்பக் கஷ்டமான நிபந்தனையா இருக்கே என்று நினைக்காதீங்க. பூமியைக் காப்பாற்றும் வேலை என்றால் சும்மாவா. "கடலைமுத்து" மாதிரி ஸ்டிரிக்ட்டான ஆபீசரைத்தானை இதுபோன்ற பொறுப்பான பணிக்குப் போட முடியும்.

நல்ல சம்பளம்ய்யா

நல்ல சம்பளம்ய்யா

சம்பளம்? வருடத்திற்கு 1,24,406 டாலர் முதல் 1,87,000 டாலர் வரை என்று நாசா நிர்ணயித்துள்ளது. இந்த வேலைக்காகவே நாசாவில் டேபிள் சேர் போட்டு ஆபீஸெல்லாம் கூட இருக்குங்க. இங்கு போய் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளமுடியும்

பெண் அசிஸ்டென்ட் தேவை!

வழக்கம் போல இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பையும் காமெடி செய்து வருகின்றனர் நாசாவின் டிவிட்டர் பக்கத்திலேயே. பாஸ் பாஸ் அதிகாரி மட்டும்தானா அவருக்கு ஒரு அழகான பெண் உதவியாளர் வேண்டாமா என்று கேட்டும் காமெடி செய்து கொண்டுள்ளனர் மக்கள்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டீங்க நாசாண்ணே!

இதில் ஒருவர் அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஏற்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சுட்டிக் காட்டியுள்ளார் என்பது சுவாரஸ்யமான கூடுதல் தகவல்.

யார் அந்த பூமிநாதன் அல்லது பூமாதேவி என்பது விரைவில் தெரிய வரும். காத்திருப்போம் அதுவரை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NASA is hiring a Planetary Protection Officer to protect the Earth from various harms including Aliens.
Please Wait while comments are loading...