For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை திருட்டுத்தனமாக பார்த்த 80 பேரை சுட்டுக் கொன்ற வட கொரியா

By Siva
Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை திருட்டுத்தனமாக பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது வட கொரியா.

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை திருட்டுத் தனமாக பார்த்த 80 பேருக்கு வட கொரிய அரசு மரண தண்டனை விதித்தது. அதன்படி கடந்த 3ம் தேதி 7 நகரங்களில் அந்த 80 பேர் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துறைமுக நகரான வான்சனில் அரசு அதிகாரிகள் சுமார் 10,000 பொது மக்களை விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு வரவழைத்துள்ளனர். அவர்கள் முன்பு திருட்டுத் தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தவர்களில் 8 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிவிடிக்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றில் அப்லோட் செய்து வட கொரியாவுக்குள் கடத்தி வருகின்றனர். அப்படி கடத்தி வரப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் தான் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

English summary
North Korea reportedly executed 80 people for watching smuggled South Korean TV shows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X