அணு உலையில் ஏற்பட்ட "லீக்".. மறைக்கும் சீன அரசு.. பிரான்ஸ் தந்த புகார்.. அமெரிக்கா அவசர மீட்டிங்!
பெய்ஜிங்: சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டதாக அந்த அணு உலையை நிர்வகிக்கும் பிரான்ஸ் நிறுவனம் புகார் வைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் அமெரிக்கா களமிறங்கி உள்ளது.
சீனா தனது மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 5%க்கும் மேல் அணுமின் நிலையங்களில் இருந்துதான் பெறுகிறது. இந்த நிலையில் சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள டைஷான் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டதாக தற்போது புகார் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அணு உலையை சீன அரசும் ஃபிரேமாடோம் என்று பிரான்ஸ் தனியார் நிறுவனமும் சேர்ந்து நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், இங்கு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஃபிரேமாடோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகார்
கதிரியக்க அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் இருந்து அணுக்கதிர் வீச்சு அதிகரிப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிய கூடாது என்பதால், அணுக்கதிர் வீச்சு தாங்கு திறன் அளவை சீனா அதிகரித்துள்ளதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

தாங்கு திறன்
அதாவது மக்களால் தாங்க கூடிய அணுக்கதிர் வீச்சின் லிமிட்டை சீனா உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதால், இந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டிய நிலை வரலாம். அந்த நிலை வர கூடாது என்பதால், மக்களின் அணு கதிர் வீச்சு தாங்கு திறனை அளவை சீனா உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கசிவு குறித்து புகார் எழக்கூடாது என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தவறு
இந்த அணுமின் நிலையத்திற்கு வெளியே அணுக்கதிர் வீச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அந்த பிரான்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் உதவியை பிரான்ஸ் நிறுவனம் நாடியுள்ளது. அணு கசிகிறது, உதவி செய்யுங்கள் என்று தொழில்நுட்ப ரீதியாக பிரான்ஸ் கோரியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது. அவசர மீட்டிங் நடத்தப்பட்டு இருக்கிறது.

அவசரம்
சீனாவின் இந்த அணுமின் நிலையம் குறித்து அமெரிக்க அரசு இன்னும் எச்சரிக்கை எதையும் வெளிப்படையாக விடவில்லை. சட்டப்படி அமெரிக்கா இதில் சீனாவிற்கு வார்னிங் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இதில் ஆலோசனை மட்டுமே நடத்தி வருகிறது. எந்த எச்சரிக்கையும், அறிவிப்பும் வெளியாகவில்லை. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த அணு உலை குறித்து அடுத்தடுத்து பல மீட்டிங் நடத்தியது பெரிய சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

சீனா
இதுவரை இந்த அணு உலை குறித்து சீனா எதுவும் வாய் திறக்கவில்லை. கசிவு குறித்து பிரான்ஸ் நிறுவனம் காட்டு கத்தாக கத்திக்கொண்டு உதவிக்கு அழைத்து கொண்டு இருக்கும் நிலையில் சீனா எந்த விஷயத்தையும் பேசாமல் அமைதியாக இருக்கிறது. அணுக்கசிவு குறித்து அப்படியே மூடி மறைக்க சீனா முயற்சி செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரான்ஸ்
அதேபோல் ஃபிரேமாடோம் என்று பிரான்ஸ் தனியார் நிறுவனமும் ஏன் சம்பந்தமே இல்லாமல் சீனாவை விட்டுவிட்டு அமெரிக்காவை நாடுகிறது. ஏன் அமெரிக்காவின் உதவியை கேட்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை சீனாவால் உதவ கூடிய அளவை விட நிலைமை மோசமாகிவிட்டதால் அமெரிக்காவின் உதவியை பிரான்ஸ் நாடி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரஷ்யா
ரஷ்யாவில் 1986ல் செர்னோபில்லில் இதேபோல் அணு உலை விபத்து ஏற்பட்டது. அப்போதும் ரஷ்யா இதேபோல் வெளியே எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது. அணு கசியவில்லை, கசியவில்லை என்றது. செர்னோபில் அணு உலை வெடிப்பு காரணமாக மொத்தமாக அந்த பகுதியே வாழ தகுதியற்றதானது. தற்போது சீனாவில் ஏற்பட்டு இருக்கும் அணு கசிவு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications