For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள வங்கிகளில் முடங்கிய 3.5 கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்

நேபாள வங்கிகளில் 3.5 கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

காத்மண்டு: இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் நேபாள வங்கிகளில் உள்ள 3.5 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 3.5 கோடி ரூபாய் 500 மற்றும் 1000 கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை நேபாள வங்கிகள் முடக்கியுள்ளது.

Old Rs.500 and 1000 notes worth 3.5 crore in Nepal banks

இதுகுறித்து, நேபாள ராஷ்டிர வங்கியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் பௌடெல் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் உரிமம் பெற்ற வங்கிகளிடம் முடக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ.3.5 கோடி என்று தெரிய வந்துள்ளது. இன்னும் ஒரு சில நிதி நிறுவனங்களில் உள்ள முடக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பும் தெரிய வந்தால், அது 4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவுக்குள் வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகளும், எல்லையோரம் வசிக்கும் மக்களும், இந்தியாவில் பணியாற்றும் நேபாள மக்களிடமும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் என்று நேபாள மத்திய வங்கி கருதுகிறது.

பொதுமக்களிடம் எந்த அளவுக்கு இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் என்பது குறித்து சரியான கணக்கு இல்லை என்றும் பௌடல் கூறியுள்ளார்.

முடக்கப்பட்ட இந்திய நோட்டுக்களை மாற்றி கொடுப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் நோபாள அரசு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு முறையாக பழைய நோட்டுக்களை மாற்றுவது தொடர்பாக உரிய வகையில் இந்தியா முடிவெடுத்து அறிவிக்கும் என்று இந்திய அரசு தரப்பில் நேபாளத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
Nepal's banking system has held banned Indian currency 500 and 1,000 notes worth Rs.3.5 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X