2018க்கு பிறகு.. மீண்டும் ஓமன் செல்லும் பிரதமர் மோடி! ரொம்ப முக்கியம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
மஸ்கட்: கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டுக்கு சென்றிருந்தார். இதனையடுத்து, தற்போது மீண்டும் ஓமன் நாட்டுக்கு செல்கிறார். இது மிக முக்கியமான நிகழ்வு என்றும், இந்நிகழ்வை நாங்கள் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனவும் இந்தியாவிற்கான ஓமன் தூதர் இசா சலே அப்துல்லா சலே அல்ஷிபானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நரேந்திர மோடியின் வருகை இருநாட்டு உறவுகளுக்கு முக்கியமானது. ஓமனும் இந்தியாவும் கொண்டுள்ள ஆழமான உறவை வணிக உலகிற்கு இது உணர்த்துகிறது. ஓமனை ஒரு முதலீட்டு இலக்காகக் கருதும் வணிக நிறுவனங்களின் நம்பிக்கையையும் இது அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, இந்த மாத இறுதியில் ஓமனுக்கு செல்ல இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக ஓமன் சென்றிருந்தபோது, போதைய சுல்தான் காபூஸ் பின் சயீதை சந்தித்து, இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்திருந்தார்.
ஹூதி கிளர்ச்சியாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவர், சமீபத்தில் குடும்பத்துடன் இணைந்தார். இது மகிழ்ச்சியளிக்கிறது என்று தூதர் அல்ஷிபானி தெரிவித்தார். கேரளாவின் காயங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ரவீந்திரன் என்பவர், MV எடர்னிட்டி சி எனும் கப்பலில் பணியாற்றி வந்திருந்தார். இந்த கப்பல், கடந்த ஜூலை மாதம் செங்கடலில் தாக்குதலுக்குள்ளானது. கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியிருந்தனர். கப்பல் மூழ்கியதையடுத்து அவர் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் கோரிக்கையை அடுத்து ரவீந்திரன், விடுவிக்கப்பட்டிருந்தார். "அந்த நபர் குடும்பத்துடன் இணைந்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஓமன் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஓமன், அந்த நம்பிக்கையையும், நட்பையும் பயன்படுத்தி தேவைப்படும் இடங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது" என இந்த சம்பவம் குறித்து ஓமன் தூதர் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல சமீபத்தில் நடந்த இந்தியா-ஓமன் கிரிக்கெட் போட்டி, ஓமனில் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறித்து அல்ஷிபானியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "ஓமனில் அனைத்து வகையான விளையாட்டுகளையும் மக்கள் விரும்புகிறார்கள். கிரிக்கெட்டுக்கு ஓமனில் ரசிகர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இது வளர்ந்து வரும் விளையாட்டு. முன்பு கால்பந்துதான் ஓமனில் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக இருந்தது. இப்போது அனைத்து விளையாட்டுகளும் ஓமனில் வளர்ந்து வருவதையும், மக்கள் அனைத்து விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்பதையும் காண்கிறோம். இது மக்களுக்கிடையேயான உறவுகளின் ஆழத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்திய சமூகத்தில் கிரிக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஓமனில் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications