For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தம்பித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் மக்கள் போராட்டம் கையைவிட்டுச் செல்லும் நிலை உருவாகி உள்ள நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்தது முதலே மிகக் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை அப்போதைய பிரதமர் இம்ரான் கான் முறையாக மேம்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் தரப்பும் இதில் இணைந்து கொண்டதால் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

 பக்கா ஸ்கெட்ச்! காத்திருந்து பாய்ந்த பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. இம்ரான் கான் மீது வழக்கு.. பரபர பக்கா ஸ்கெட்ச்! காத்திருந்து பாய்ந்த பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. இம்ரான் கான் மீது வழக்கு.. பரபர

 முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

அவருக்குப் பதிலாக ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புகிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதில் மிகப் பெரிய சதி நடந்துள்ளதாகவும் அதில் சில அந்நிய நாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் சாடியிருந்தார். மேலும், ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்த இம்ரான் கான், இன்று அதிகாலை பாக். தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராணுவம்

ராணுவம்

இந்த முற்றுகை போராட்டம் காரணமாகத் தலைநகரில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அங்குள்ள போலீசார் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு அமைதியின்மையைத் தொடர்ந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 245ஐ பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

இம்ரான் கான் தலைமையிலான போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாத் நகரில் நுழைந்துள்ள நிலையில், முக்கியமான அரசு கட்டிடங்களைப் பாதுகாக்கப் பாகிஸ்தான் அரசு அப்பகுதிகளைச் சிவப்பு மண்டலமாக அறிவித்து அங்கு ராணுவத்தைக் களமிறக்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் இல்லங்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு

அழைப்பு

பாகிஸ்தான் தலைநகரில் சில இடங்களில் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்த முற்றுகை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று இம்ரான் கான் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் உண்மையான விடுகதையைப் பெற வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended Video

    Ka-31 AEW-க்கு No! | India-Russia Defence deal ரத்து | China VS America | #DefenceWrap
     மனித உரிமை அமைப்பு

    மனித உரிமை அமைப்பு

    இது குறித்து பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் கூறுகையில், "சட்டப்படி அனைத்து மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு. அரசின் அதிகப்படியான எதிர்வினை என்பது வீதிகளில் வன்முறையைத் தடுக்கவில்லை. மாறாக வன்முறையை அதிகமாகவே மாற்றி உள்ளது. அரசும் எதிர்க்கட்சி தலைவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்" என்றும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Pakistan government called in the army to protect the Red Zone as former Pakistan Prime Minister Imran Khan entered Islamabad: (பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் மாபெரும் போராட்டம்) Imran Khan's massive protest in Islamabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X