ஆபத்தான நாடு என்பதா?.. ஜோ பைடனின் கருத்துக்கு எதிராக பொங்கி எழுந்த பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறிய நிலையில், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பையே பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆளும் கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டார்.

ஜோ பைடன் உரை

ஜோ பைடன் உரை

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, உலகை வழிநடத்தி செல்லும் ஆற்றல் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இது கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளது. தனி நபரினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டினாலோ அல்ல என்று கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துவரும் நிலையில் அது குறித்தும் ஜோ பைடன் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு

பாகிஸ்தான் பிரதமர் மறுப்பு

அப்போது ஜோ பைடன், 'உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம்.. அந்நாட்டில் அணு ஆயுதங்களில் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாத நிலை நிலவி வருகிறது' என்றார். மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த விமர்சனத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால்

பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால்

இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ''பாகிஸ்தான் பொறுப்பு மிக்க அணு ஆயுத நாடு என்பதை பல தசாப்தங்களாக நிரூபித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், அணு ஆயுதம் தொழில்நுட்ப ரீதியாகவும் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. அணு ஆயுத விவகாரங்களை பொறுத்தவரை சர்வதேச தரநிலைகளை கடைப்பிடிக்கும் வகையில் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களின் உண்மையான விருப்பம்

எங்களின் உண்மையான விருப்பம்

பாகிஸ்தானும் அமெரிக்காவும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையிலான நீண்ட நால நட்புறவு என்ற வரலாற்றை கொண்ட நாடுகளாகும். உலகம் மிகப்பெரும் சர்வதேச சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான உறவின் உண்மையான ஆற்றலை உணர தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து உண்மையான மற்றும் நீடித்த முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் உண்மையான விருப்பம் ஆகும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+