ஒவ்வொரு நாடாக சென்று.. தலை குனிந்து நின்றோம்! அவமானத்தை சொல்லி வேதனைப்பட்ட பாக். பிரதமர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத கடனில் சிக்கியிருக்கிறது. இருப்பினும் பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள மேலும் கடனை வாங்கி குவித்து வருகிறது. இப்படி கடன் வாங்க போகும்போது, தான் சந்தித்த அவமானங்கள் குறித்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனையுடன் பகிர்ந்திருக்கிறார்.
நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஷெபாஸ் ஷெரீப், தனது நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாடுகளில் கடன் வாங்குவதால் ஏற்படும் அவமானம் குறித்து மிகவும் உருக்கமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதாரம்
"நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. சாமானிய மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர். மேலும், 2023-ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) நிர்வாக இயக்குநருடன் பாரிஸில் நான் சந்தித்த கூட்டத்தைப் பற்றியும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். அக்கூட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியம் ஒரு பொருளாதாரத் திட்டத்தை ஒப்புதல் அளித்தது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியது.
தலை குனிந்த பாக்., பிரதமர்
கடினமான காலங்களில் நட்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளித்தது. ஆனால் கடன் கேட்டு போகும் போது நமது தலை குனிந்துதான் இருக்கும். ராணுவ தளபதி ஆசிம் முனீருடன் இணைந்து, பல பில்லியன் டாலர் கடன்களைப் பெற பல நாட்டுத் தலைவர்களை சந்தித்திருக்கிறேன்.
பாகிஸ்தானின் கடன்
இருப்பினும், நட்பு நாடுகளிடம் நாங்கள் எப்படி கடன்களைக் கேட்டோம் என்று.. எங்களால் உங்களிடம் விவரிக்க முடியாது. அந்த நொடி அப்படி நெருக்கடியாக இருந்தது. நட்பு நாடுகள் எங்களை ஏமாற்றவில்லை. ஆனால், கடன் வாங்கச் செல்பவர்கள் தலைகுனிந்துதான் செல்ல வேண்டும். கடன்கள் சில கடமைகளையும், பொறுப்புகளையும் உருவாக்குகின்றன, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
உதவும் நாடுகள்
கடன் வாங்கச் செல்லும்போது, உங்கள் தன்னம்பிக்கையை விலையாகக் கொடுத்து நீங்கள் ஈடு கட்ட வேண்டும். சமரசங்கள் செய்ய வேண்டும்... சில சமயங்களில், நியாயமற்ற கோரிக்கைகள் வரலாம், அதை நிறைவேற்ற எந்தக் காரணமும் இல்லாதபோதிலும் நீங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறோம்.
சீனாவின் உதவி
அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் கடன்களை நிர்வகிக்க சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நாடுகளின் நிதி உதவியை பாகிஸ்தான் பெரிதும் நம்பியுள்ளது. இந்த நாடுகள், ஐ.எம்.எஃப் உடன் இணைந்து, பணத்தட்டுப்பாடுள்ள பாகிஸ்தானுக்கு வழக்கமான கடன்கள் மற்றும் கால நீட்டிப்புகளை வழங்கி வருகின்றன.
இப்படி இருக்கையில் பாகிஸ்தான் சந்தித்துள்ள நெருக்கடி குறித்து, அந்நாட்டு பிரதமர் வெளிப்படையாக பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications