For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்காரம் செய்தவர்களை விடுவித்த பாக். நீதிமன்றம்-மனமுடைந்த பெண் தற்கொலை

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: தம்மை பலாத்காரம் செய்தோரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்ததால் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் நகரை சேர்ந்தவர் அமீனா பீபி . சம்பவத்தன்று வீட்டில் தனது சகோதரனுடன் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அமீனாபீபியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து முசாபர்கர் நகர போலீசில் அமீனா பீபி புகார் செய்தார். அதைத்தொடர்ந்து பலாத்கார குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என கூறி அவர்கள் 5 பேரையும் போலீசார் விடுதலை செய்தனர். அப்போது விசாரணைக்கு வந்திருந்த அமீனா பீபி மனவருத்தம் அடைந்தார்.

உடனே போலீஸ் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகிய அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

தற்போது இந்த வழக்கை மீண்டும் விசாரித்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

English summary
Pakistani woman was immolated in Musabar kar city. She was raped by 5 unknown persons. But, they released by court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X