அமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பல்வேறு சமூக நிகழ்வுகளை அமெரிக்க மண்ணில் புலம் பெயர்ந்த தமிழர்களாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் சாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும், ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையை புரட்டிப் போடவும் பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில ஒத்த கருத்துடைய தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.

Periyar Ambedkar Study Circle America Released their Year Note

அதன் மாதாந்திர செயல்பாடுகள் :

1. ஏப்ரல் 14, 2017 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமைப்பு துவக்கம் பல்வழி அழைப்பு மூலம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அமைப்பைத் துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

2. மே 3, 2017 தோழர் ஓவியா, பெரியார் அம்பேத்கர் பார்வையில் தொழிலாளர்கள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

3. மே 19, 2017 தோழர் வே மதிமாறன், பெரியார் அம்பேத்கர் ஒரு தத்துவத்தின் இரு மொழிகள் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

4. ஜூன் 2, 2017 தோழர் பழமைபேசி, தமிழ்மரபு வழியில் பகுத்தறிதல் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

5. ஜூன் 23, 2017 தோழர் ஆதவன் தீட்சண்யா சாதி மறுப்பும், சாதி ஒழிப்பும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

6. ஜூன் 30, 2017 2017 ஆம் ஆண்டு பெட்னா விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் முதல் இணையமர்வு நடத்தப்பட்டது. அதில், கவிஞர் சுகிர்தா ராணி, திரைப்பட நடிகை தோழர் ரோகிணி கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தோழர்கள் அந்த இணையமர்வின் மூலம் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

7. ஜூலை 21, 2017 திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் அய்யா சுப வீரபாண்டியன், இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் என்கிற தலைப்பில் சிறப்புரை.

8. ஆகஸ்ட் 18, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ், பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன் ? என்கிற தலைப்பில் சிறப்புரை.

Periyar Ambedkar Study Circle America Released their Year Note

9. செப்டம்பர் 02, 2017 இந்துத்துவ அரசால் நீட் என்ற சமூக அநீதி கொண்டுவரப்பட்டு பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்தும் மருத்துவர் கனவை இழந்த குழந்தை அனிதாவின் மரணத்திற்கு நியூஜெர்சி, மிச்சிகனில் மாகாணத்தில் நினைவேந்தல்கள் நிகழ்வு நடந்தது.

10. செப்டம்பர் 16, 2017 மிச்சிகன் மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகளைத் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தி தந்தை பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றனர்.

11. செப்டம்பர் 17, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புரை ஆற்றினார்.

12. செப்டம்பர் 20, 2017 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா, பதிவு செய்யப்பட்டு ஒரு தன்னார்வ அமைப்பாக அமெரிக்க அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

13. செப்டம்பர் 23, 2017 நியூ ஜெர்சி மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கருத்தரங்கம் ஏற்பாடு செய்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. மேலும், அனிதாவை பலி வாங்கிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நியூயார்க் இந்திய தூதரகம் முன்பு புலம் தமிழர் ஏற்பாடு செய்த கண்டனக்கூட்டங்களில் பெரியார் அம்பேத்கர்
 படிப்பு வட்டம் கலந்து கொண்டது.

14. அக்டோபர் 20, 2017 மனநல மருத்துவர் ஷாலினி, The Three Men and All Women என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

15. நவம்பர் 3, 2017 புத்தகம் பேசலாம் என்ற புதிய நிகழ்ச்சி அறிமுகம் புத்தகம்: பெண் ஏன் அடிமையானாள் ? இதில் பழமை பேசி சிறப்புரை ஆற்றினார்.

16. நவம்பர் 17, 2017 ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான், சமூக நீதியும் அடித்தட்டு மக்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

17. டிசம்பர் 15, 2017 திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி , பெரியாரியம் அம்பேத்கரியம் பெண்ணியம் மேலும் சில கேள்விகள் என்கிற தலைப்பில் கலைந்துரையாடினார்.

18. ஜனவரி 3, 2018 அன்று, பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும், ராமர் கோவிலும் என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், பேராசிரியர் சிவப்பிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.

19. ஜனவரி 15, 2018 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் அடுத்த கட்ட செயல்பாடாக "TheCommonSENSE" -  என்ற இணைய இதழை ஜனவரி மாதம் 15ம் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் முதல் மாத இதழாக வெளியானது. தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், கருத்தியல் சார்ந்த கட்டுரைகளையும், செய்திகளையும் இதே கருத்தியல்கள் கொண்டவர்களையும் தாண்டியும் அமெரிக்க மக்களிடம் கொண்டுசேர்க்கும் குழுமத்தின் புதிய முயற்சியே "The Common Sense" மாத இதழ். மாதம் 7-8 சிறப்புக் கட்டுரைகள், தமிழகத்தில் நிகழ்ந்த சமூகநீதி சார்ந்த நிகழ்வுகள் எனப் பல செய்திகள் வெளியிடப்படுகிறது.

20. ஜனவரி 17, 2018 எழுத்தாளர் தோழர் பாமரனுடன் உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

21. பிப்ரவரி 4, 2018 தமிழ்த் தாய் வாழ்த்து காஞ்சி சங்கராச்சாரியால் அவமதிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து கண்டனம் அறிக்கை. நியூ ஜெர்செயில் தோழர்கள் கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது.

22. பிப்ரவரி 7, 2018 அன்று, அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு புத்தகம் குறித்து தோழர் பார்த்திபன் உரையாற்றினார்.

23. பிப்ரவரி 18, 2018 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் இரு வாரப் பயணமாக அமெரிக்கா வந்திருந்தார். அதில் முதல் நிகழ்வை நியூ ஜெர்சி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தோழருடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது, அதில் தோழருக்கு "சமூக நீதிக்கான செயல் விருது " அளிக்கப்பட்டது.

24. பிப்ரவரி 21, 2018 பெண்ணிய கவிஞர் தோழர் சல்மா அவர்கள் இரண்டாம் ஜாமம் புத்தகம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

25. மார்ச் 7, 2018 அன்று, இராவண காவியம் புத்தகம் குறித்து தோழர் ஆசிப் சிறப்புரை ஆற்றினார்.

26. மார்ச் 21, 2018 போதி நிறுவனத்தின் இயக்குநர் தோழர் ராஜ்மோகன், Positive Parenting என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .

27. ஏப்ரல் 04, 2018 புத்தகம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பது ஆகமமா? வருணாசிரமமா? குறித்து பேராசிரியர் சிவபிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.

28. ஏப்ரல் 14, 2018 அன்று நியூ ஜெர்சி மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா ஓவிய போட்டி, கருத்தரங்கம் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டது .

29. ஏப்ரல் 15, 2018 பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா அம்பேத்கர் இயக்கமும் இணைந்து மிச்சிகன் மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது, அதில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஓராண்டு நிறைவு சிறப்புச் சொற்பொழிவின் போது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின்  இணையதளத்தை வெளியிட்டார்.

மேலும், வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பற்றி சந்தேக கேள்விகளைத் தொகுத்து அதற்காகப் பதில்களையும் வெளியிட்டு இருக்கிறோம். அது பலரால் பகிரப்பட்டு பெரும் ஆதரவை அளித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் பற்றிய சந்தேக கேள்விகளை தொகுத்து பதில்களை தயாரித்து விரைவில் வெளியிடப்படும். 
 மேலும் தந்தை பெரியார் பற்றி 10 நிமிட வாழ்க்கை வரலாற்றுக் காணொளியை ஆங்கிலத்தில் YouTube - PASC America  சேனலில் வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்காவில் ; கடல் கடந்து வந்த சாதி மத பிற்போக்குவாதிகளுக்கு சாட்டையாகச் சுழலும் என்று அந்த ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Periyar Ambedkar Study Circle America Released their Year Note. Periyar Ambedkar Study Circle America founded last year and they took forth many efforts to enlight Tamil community in America.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற