பறக்கும் போதே கழன்று விழுந்த விமான என்ஜின்.. 363 பேரின் வாழ்க்கையில் விளையாடிய சிறிய போல்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விமானத்தின் என்ஜின் நொறுங்கிய போதும் வீடியோ எடுத்து ரிலீஸ் செய்த மக்கள்

  சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் விமானம் ஒன்றில் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்து இருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது.

  இதற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை. விசாரணை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

  ஒரு சிறிய போல்ட் செய்த பிரச்சனையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விமான ஓட்டி கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானம்

  யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்புவதற்கு முன் மிகவும் சரியான நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் போக போகச் சிறிய தேவையற்ற அசைவுகள் இருந்துள்ளது. பெரிய சத்தம் ஒன்று கேட்டு இருக்கிறது. பார்த்தால் ஒருபக்கம் இருந்த என்ஜினின் மேல் பகுதி கழன்று விழுந்துள்ளது.

  விழுந்தது

  கொஞ்ச நேரத்தில் இன்னும் பெரிய சத்தம் கேட்டு இருக்கிறது. அப்போது மொத்தமாக அந்த ஒரு என்ஜினின் ஒரு பகுதி அப்படியே கழன்று விழுந்துள்ளது. உடனே விமானம் நிலைதடுமாறி ஆடியுள்ளது. 363 பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள்.

  திறமை

  இந்த நிலையில் பயணிகளுக்கு அவசரக் காலத்தில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் மீதம் இருக்கும் மூன்று என்ஜின்களை வைத்துக் கண்டிப்பாக தரையிறக்க முடியும் என்றும் விமானிகள் கூறியுள்ளனர். அந்த ஒரு என்ஜினின் ஒரு பாதி விமானத்திலேயே இருந்துள்ளது. மீதி பாதி பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது.

  தரையிறக்கினர்

  தரையிறக்கினர்

  இந்த நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் அந்த விமானம் ஹவாயில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 363 பயணிகள், 8 விமான பணியாளர்கள், 2 விமான ஓட்டிகள் ஆகியோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Plane's starboard engine ripped of inn midair in San Francisco. The 363 passengers, eight flight attendants and two pilots were safely landed in Hawaai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற