For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளிக்கு பறக்கப் போகும் “எலிகள்” – நாசா புதிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரு காலத்தில் விண்வெளி சோதனைகளுக்கு பயன்பட்ட எலிகளை மீண்டும் அதிக காலத்திற்கு விண்வெளிக்கு அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

ஸ்பேஸ்.காம் என்ற இணையதளத் தகவலின்படி, இந்த புதிய "எலி விண்வெளி வீரர்கள்" விண்வெளியில் 30 முதல் 90 நாட்களுக்கு தங்கும்படி அனுப்பபடும்.

சர்வதேச விண்வெளி மையத்தின் முதன்மை விஞ்ஞானியான ஜூலி ராபின் இதுபற்றி, இதன் மூலமாக விலங்குகள் எவ்வளவு காலம் விண்வெளியில் தங்க இயலும் என்பதனைக் கணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், எலியைவிட அளவில் சிறியதான மூஞ்சுறுகளையும் அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவை குறைந்த அளவிலான உணவினை மட்டுமே உண்டு உயிர் வாழக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

English summary
Rats have flown to spacebefore but now NASA is planning to send them again to the space for longer periods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X