For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பாக். செல்கிறார் பிரதமர் மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

உஃபா: சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

PM Modi to visit Pakistan in 2016
  • 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
  • பயங்கரவாதம் தொடர்பாக இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசர்களும் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர்.
  • மும்பை தாக்குதல் வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்; இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இருதரப்பும் பரிமாறிக் கொள்வது.
  • எல்லை தாக்குதல்கள் தொடர்பாக இருதரப்பு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
  • இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் 15 நாட்களுக்குள் விடுவிப்பது.
  • மதரீதியான சுற்றுலாவுக்கான செயல்திட்டங்களை உருவாக்குதல்

முதல் பாகிஸ்தான் பயணம்

பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இருப்பினும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

English summary
Prime Minister Narendra Modi today accepted his counterpart Nawaz Sharif's invitation to attend the Saarc summit in Pakistan next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X