For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷத்துக்கே விஷம்.. கொரோனாவை கட்டுப்படுத்தும் பாம்பின் நஞ்சு.. ஆராய்ச்சியில் புது திருப்புமுனை

ஒருவகை பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

பிரஸ்ஸிலா: ஒருவகை பாம்பின் விஷத்தில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறானது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக விஞ்ஞானிகள் புது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் உலகையே தன் பிடியில் வைத்து நடுங்க வைத்து வருகிறது.. இந்த வைரஸ் எந்த மாதிரியான வைரஸ் என்று உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. இதன் அறிகுறிகள் இதுதான் என்று உறுதியாகவும் திட்டமிட்டும் சொல்ல முடியவில்லை.

ஒன்றை கண்டுபிடிப்பதற்குள் இன்னொரு பரிமாணம் தொடங்கிவிடுகிறது.. எனினும் இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆறுதலாக அமைந்து வருகிறது.. அவைகளைதான் மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை புரட்டியெடுக்கும் டெல்டா வைரஸ்.. அதிக உயிரிழப்பு..மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அமெரிக்காவை புரட்டியெடுக்கும் டெல்டா வைரஸ்.. அதிக உயிரிழப்பு..மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இருப்பினும் சிகிச்சைக்கு தனியாக மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால், அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகளும், டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.. தற்சமயம், வேறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே இந்த கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மருந்து

மருந்து

இப்படிப்பட்ட சூழலில்தான், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.. அது கொடிய பாம்பின் விஷம்.. இந்த விஷம்தான் கொரோனாவை கட்டுப்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்... ஜரரகுசு பிட்விபர் என்ற பாம்புதான் இருப்பதிலேயே விஷம் அதிகமான பாம்பாம்.. இந்த பாம்பின் விஷத்தை, குரங்கின் உடலில் செலுத்தி கொரோனா பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.

மூலக்கூறு

மூலக்கூறு

இப்படி ஒரு பகீர் ஆய்வை நடத்தியது ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி ஆவார்.. இவர்தான் ஜரரகுசு பிட்விபர் என்ற ரக பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரஸில் உள்ள முக்கிய புரதத்தை கட்டுப்படுத்துவதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சொல்கிறார்.. அதேநேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால் ஜரரகுசு பிட்விபர் பாம்புகளை பிடிக்கவோ வளர்க்கவோ தேவையில்லை என்றும் ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மனிதனைப் போல கத்தும் Snake Video பின்னணி | Telangana Snake Shouting Video | Oneindia Tamil
    பாம்பு

    பாம்பு

    இப்போதைக்கு பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொடிய கொரோனாவை கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.. இத்தனை நாள் இந்த வைரசுக்கு மருந்து கிடைக்காத நிலையில், இப்படி ஒரு மருந்தை தயாரிக்கும் முயற்சியானது பெருத்த சாதனையாகவே கருதப்படுகிறது.. இப்போது முதல்கட்ட ஆய்வு நடந்துள்ளதால், இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் அடுத்ததாக மூலக்கூறின் வெவ்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீட்டு செய்து வருகின்றனர்.

    English summary
    Poisonous Brazilian Viper Venom may become covid 19 medicine says study
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X