For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை வாட்டி எடுக்கும் கடுங்குளிர்

By Siva
Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவின் சில பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது.

குளிர்காலத்தில் வடக்கு துருவத்தை சுற்றி சுற்றி வேகமாக வீசும் காற்றுக்கு பெயர் போலார் வோர்டெக்ஸ். இந்த குளிர் காற்று அமெரிக்காவின் மான்டனா மாநிலம் முதல் தென்கிழக்கு மாநிலமான அலபாமா வரை வீசுகிறது. இந்த இடங்களில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர் நிலவி வருகிறது.

இந்த கடுங்குளிருக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மான்டனா மாநிலத்தில் தட்பவெட்ப நிலை 11 முதல் 22 டிகிரி செல்சியஸாக இருந்தது. பிரிம்சன், மின்னசோடா மாநிலத்தில் தட்பவெட்ப நிலை மைனஸ் 40 செல்சியஸாக இருந்தது.

சிகாகோவில் நிலவும் குளிரால் விமானத்திற்கான எரிபொருள் உறைந்துவிட்டது. இதனால் சிகாகோவில் உள்ள ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. மதிய வேளையில் சிகாகோவில் தட்பவெட்ப நிலை மைனஸ் 24 செல்சியஸாக இருந்தது.

Polar freeze grips United States, coldest temperatures in two decades

வடக்கு துருவத்தில் வீசும் குளிர்ந்த காற்றான போலார் வோர்டெக்ஸ் தெற்கு பகுதியிலும் வீசும். இந்த காற்று கிழக்கு கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்ததால் இன்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 25 செமீ அளவுக்கு நேற்று பனிப்பொழிவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Temperature has plunged in some parts of the United States as polar vortex hit the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X