For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கைது

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகரான 18 வயது ஜஸ்டின் பீபருக்கு ரசிகர்களை விட ரசிகைகளே அதிகம். இவர் தெற்கு புளோரிடாவில் மியாமி கடற்கரை பகுதியில் அதிவேகமாக கார் ஓட்டியதற்காக போலீசார் கைது செய்தனர்.

பீபரைக் கைது செய்தது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளை அந்நகர போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் சிவப்பு நிற உடையணிந்து, தலை முடி கலைந்து காட்சியளிக்கிறார் பீபர்.

அதிவேகமாக....

அதிவேகமாக....

பொதுவாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அங்கு மணிக்கு 30 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே கார் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் அமெரிக்காவில் உள்ளது. ஆனால், பீபர் மணிக்கு 55 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் கார் ஓட்டியுள்ளார்.

கார் பந்தயம்....

கார் பந்தயம்....

போலீசாரின் விசாரணையில், பீபர் தனது நண்பரும், சகபாடகருமான கலீல் ஷெரீயப்புடன் பந்தயம் கட்டி போட்டியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மதுபோதையில்...

மதுபோதையில்...

மேலும், காரோட்டிய போது அவர் மது அருந்தியதும், மறிஞ்சுனா என்ற போதை சிகரெட் புகைத்திருந்ததும் உறுதியானதைத் தொடர்ந்து ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது நண்பர் கலீல் ஷெரீயப்பை போலீசார் கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீன்....

நிபந்தனை ஜாமீன்....

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட பீபரும், அவரது நண்பரும் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.

English summary
Teenage popstar Justin Bieber appeared to be heading to jail on Thursday after being arrested on suspicion of drag-racing and drink-driving in Florida.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X