For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபல நடிகை செய்த காரியம்.. இனிமே இப்படித்தானாம்.. "துணிச்சல்" போட்டோவை பார்த்து அதிர்ந்த மக்கள்

பிரபல நடிகை ஹிஜாப் அணியாமல் போட்டோ எடுத்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: பிரபல ஈரான் நடிகை ஹிஜாப் அணியாமல் ஒரு போட்டோவை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.. என்ன காரணம்?

ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு, மாஷா அமினி என்ற 22 வயது பெண், தன்னுடைய சொந்தக்காரர் ஒருவரை பார்க்க குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்..

அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து, ஹிஜாப்பை ஒழுங்காக அணியவில்லையே ஏன் என்று கேட்டு கைது செய்தனர்.

போலீஸ் காவலில் மிகக்கொடூரமாக அவர் தாக்கப்பட்டார்..

தொடர் கனமழை.. தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை பல்கலைக்கழக பரீட்சை தள்ளிவைப்பு தொடர் கனமழை.. தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை பல்கலைக்கழக பரீட்சை தள்ளிவைப்பு

கோமா ஸ்டேஜ்

கோமா ஸ்டேஜ்

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அந்த பெண் கோமா நிலைக்கே சென்றுவிட்டார்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமான சிகிச்சை பெற்று வந்தநிலையில், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பல நாடுகளில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க தொடங்கின.. அந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.. மற்றொருபக்கம் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாட்டில் உள்ள பெண்கள் தங்களது முடியை வெட்டி ஆதரவு அளிக்க முன்வந்தனர்..

பிரபல நடிகை

பிரபல நடிகை

இது எதற்காகவென்றால், வழக்கமாக, பெண்களின் அழகு சின்னமாக பார்க்கப்படுவது தலைமுடி ஆகும்.. அதனை வெட்டுவதன் மூலம் சமூகத்தின் அழகு என்று சொல்லப்படும் அவற்றை பற்றி பெண்கள் கவலைப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டவே, பெண்கள் தங்கள் தலைமுடியை இழக்க துணிந்துள்ளனர்.. இந்த போராட்டத்திற்கு நம் நாட்டிலும், ஆதரவு கரம் நீட்டப்பட்டது.. பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுடேலா தன்னுடைய முடியை வெட்டி ஆதரவு தெரிவித்திருந்தார்..

ஹிஜாப்

ஹிஜாப்

"ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் கொல்லப்பட்ட ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக என் தலைமுடியை வெட்டுகிறேன் என்று பகிரங்கமாகவே பதிவிட்டிருந்தார்.. ஒருபக்கம் தலைமுடியை வெட்டி, எதிர்ப்புகளை பெண்கள் பதிவு செய்து வரும் அதேசமயம், ஹிஜாப்பை துறந்து, அதன்மூலமும் எதிர்ப்புகளை காட்ட துவங்கி உள்ளனர். தற்போது, ஈரானின் பிரபல நடிகை தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் என்பவரும் அப்படித்தான் முடிவெடுத்துள்ளார்.. ஹிஜாப் இல்லாமல் தன்னுடைய போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு ஆதரவை வழங்கி இருக்கிறார்..

ம்ஹூம் மாட்டேன்

ம்ஹூம் மாட்டேன்

இந்த போட்டோவை பதிவிட்டதுடன், "நான் இங்கேயேதான் இருக்கேன்.. இங்கிருந்து வெளியே போக மாட்டேன். நான் என்னுடைய வேலையை நிறுத்திவிட்டு, இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் ஆதரவாக இருக்க போகிறேன்... அவர்களுக்காக வாதாட போகிறேன்.. நான் என்னுடைய தாய் நாட்டுக்காக போராடுவேன்... என்னுடைய உரிமைகளுக்காக நிற்க, எந்த விலையையும் கொடுப்பேன்... முக்கியமாக, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்..

ஃபேமஸ் நடிகை

ஃபேமஸ் நடிகை

இந்த நடிகை ஈரானில் மட்டுமல்ல, உலகப்புகழ்பெற்றவரும் கூட.. காரணம், ஈரானின் தாரனே அலிதூஸ்டி ஆஸ்கர் விருது வென்ற 'தி சேல்ஸ் மேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆவார்.. அதனால், அவர் பதிவிட்ட இந்த ட்வீட், அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.. பொதுவாக, ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... அதுமட்டுமல்ல, பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிப்பதற்காகவே, "காஸ்த் எர்ஷாத்" என்ற ஸ்பெஷர் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், ஹிஜாப்பை துறந்து, பிரபல நடிகை அறிவித்துள்ள இந்த முடிவு, மிகப்பெரிய அதிர்வுகளை அந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது..!!

English summary
Popular Iranian actress poses without headscarf in support of anti-hijab protests
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X