ஹோண்டுராஸ் அருகே 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்வான் தீவு, ஹோண்டுராஸ்: ஹோண்டுராஸ் - கியூபா இடையே நடுக் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நி்லநடுக்கத்தின் மையமானது நடுக் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powerful earthquake hits Honduras and Cuba

ஹோண்டுராஸில் உள்ள கிரேட் ஸ்வான் தீவு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேத விவரம் குறித்துத் தெரியவில்லை. ஹோண்டுராஸ் உள்ளூர் நேரப்படி இரவு 8.51க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ஹோண்டுராஸ் கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் வருவது இயல்பு என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Powerful earthquake has struck near Great Swan Islands, Honduras. The quake was felt in Cuba too. No report on damages and casualties.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற