அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. பதறியடித்து ஓடிய மக்கள்! இந்தோனேசியாவில் நீடிக்கும் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா தீவானது 'ரிங் ஆஃப் பஃயர்' எனும் பகுதிக்கு மேலே அமைந்திருப்பதால் இந்நாடு அடிக்கடி நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது. நிலத்திற்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுக்கள் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் பகுதிதான் 'ரிங் ஆஃப் பஃயர்' என அழைக்கப்படுகிறது. இந்த மோதல் காரணமாக தொடர் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்படும்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் 6.0 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பதறியடித்த மக்கள் உயரமான இடங்களில் சென்று தஞ்சமடைந்தனர். சாலைகளில் விரிசல்கள் விட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தற்போது சுலவேசியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் உருவாகியுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் களமிறங்கியுள்ளனர். அதேபோல இந்தோனேசியா கடற்கரை பகுதிகள் மற்றும் தீவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியா தீவுகளில் எரிமலைகள் பல இருக்கின்றன. இந்த எரிமலைகள் நிலநடுக்கம் காரணமாக வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்த பின்னர், இந்தோனேசியாவில் இது மிகப்பெரிய உயிரிழப்பாகும். கடந்த 2004 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 12க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications