பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு
ரபவுல்: பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் தீவில் உள்ள ரபவுல் நகருக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. ரபவுல் நகரில் இருந்து கிழக்கே 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. முன்னதாக கடந்த மாதம் 26ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!