For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே தவணையில் 9000 கோடி கடனை அடைக்கத் தயார்.. லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா டிவிட்

வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய மல்லையா ஒரே தவணையில் கடனை திரும்பி அளிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

லண்டன்: வங்கிகளில் வாங்கிய கடனை ஒரே தவணையில் அடைக்க தான் தயாராக இருப்பதாக லண்டனில் இருக்கும் விஜய மல்லையா கூறியுள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய விஜய மல்லையா அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார்.

லண்டனில் இருந்தபடியே வங்கிகளுக்கு அசாப்பு காட்டிக் கொண்டிருந்த விஜய மல்லையா தற்போது திடீரென்று ஒரே தவணையில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாய்ப்பு வேண்டுமாம்…

வாய்ப்பு வேண்டுமாம்…

நூற்றுக்கணக்கான கடனாளிகள் ஒரே தவணையில் கடனை திருப்பி செலுத்தியுள்ளபோது தனக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் தான் இதனை தெரிவித்தபோது வங்கிகள் அதை பரிசீலிக்க மறுத்துவிட்டதாக விஜய மல்லையா கூறியுள்ளார்.

பேச்சு வார்த்தைக்கு தயாராம்..

பேச்சு வார்த்தைக்கு தயாராம்..

நியாயமான முறையில் கடனை திருப்பி செலுத்த பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மல்லையா, பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண சுப்ரீம் கோர்ட் வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளி இல்லையாம்…

குற்றவாளி இல்லையாம்…

நியாயமான விசாரணையின்றி மத்திய அரசு தன்னை குற்றவாளியாக கருதுகிறது என்றும் தனக்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே அட்டர்னி ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளார் என்றும் விஜய மல்லையா கூறியுள்ளார்.

எங்கே போயி…

எங்கே போயி…

இவ்வளவு கடனைப் பெற்றுக் கொண்டு ஊரை விட்டு ஓடிப் போய் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் மல்லையா, இதுவரை வங்கிகளை ஏமாற்றும் நோக்கத்தோடே செயல்பட்டுள்ளார். இப்போது திடீரென்று டுவிட்டரில் பதிவிட்டு நல்லவர் போல் காட்டுகிறார் என்று வங்கி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
Ready for one-time settlement, says Vijay Mallya Ready to negotiate with banks to pay a one-time settlement said Vijay Mallya on his twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X