For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் நிர்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட பொருளாதார சீர்திருத்தம்: மோடி வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

பிரிஸ்பேன்: பொருளாதார சீர்திருத்தங்கள் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேயாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார் பிரதமர் மோடி. மாநாட்டுக்கு முன்னதாக உலகின் மிகவும் வலுவான பொருளாதாரம், தொழில் வளர்ச்சி கண்டுள்ள இந்த 20 நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்கு ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் உதவியாளர்கள் இல்லாமல், 20 நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேசினர். அபோட் வேண்டுகோளை ஏற்று பொருளாதார சீர்திருத்தம் குறித்து இக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

Reforms should be insulated from political process: PM Narendra Modi

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். அதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக அது இருக்க வேண்டும்.

அரசின் கடமையாக இதை நினைக்காமல், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. இந்த சீர்திருத்தங்கள், ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை எளிமையாக்கக் கூடியதாகவும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு மோடி பேசினார்.

English summary
Prime Minister Narendra Modi said on Saturday that reforms should be “insulated from the political process”. Calling for large-scale and deep-routed reforms, he said the process cannot be undertaken “in stealth”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X