இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

தன்பாலின திருமணங்கள்: தோல்வியடைந்த பொதுவாக்கெடுப்பு

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
  தன்பாலின திருமணங்கள்: தோல்வியடைந்த பொதுவாக்கெடுப்பு
  Getty Images
  தன்பாலின திருமணங்கள்: தோல்வியடைந்த பொதுவாக்கெடுப்பு

  தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான தடை விதிப்பது தொடர்பாக ரோமானியாவில் நடந்த பொது வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

  எதிர்பாலினங்கள் மட்டுமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் சட்டமேற்ற விரும்புகிறார்களா என்று ரோமானிய மக்களிடம் கேட்கப்பட்டது.

  ஆனால், இதில் 20.4 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். குறைந்தது 30 சதவீத வாக்குகள் பதிவானால் மட்டுமே வாக்கெடுப்பு கருத்தில் கொள்ளப்படும்.

  ஆச்சர்ய முடிவு

  ஆனால், வாக்களித்தவர்களில் 90 சதவீத பேர் எதிர்பாலினங்கள் மட்டுமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.

  வாக்களித்தவர்களில் 90 சதவீத பேர் எதிர்பாலினங்கள் மட்டுமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.
  EPA
  வாக்களித்தவர்களில் 90 சதவீத பேர் எதிர்பாலினங்கள் மட்டுமே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.

  இந்த வாக்கெடுப்பு ஆதரவான கூட்டணியின் தலைவர் மிகாய், அரசியல் சாசன நிலையில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமண பந்தத்தை பாதுகாக்க முயற்சி செய்யப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

  எனினும், ரோமானியா நாட்டின் வழக்கம் அவ்வளவாக மாறாது. அங்கு ஓரினசேர்க்கையாளர் திருமணம் மற்றும் சிவில் யூனியன்கள் ஆகியவை அங்கீகரிக்கப்படாது.

  வாக்கெடுப்பு எதிராக இருக்கும் பிரதான எதிர்கட்சியை சேர்ந்த டான் பர்னா, பொதுமக்கள் பணமான 40 மில்லியன் யூரோக்களை இதில் வீணடித்ததற்காக அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  ஆளும் கட்சியான சமூக ஜனநாயக கட்சியும் இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவு அளித்திருந்தது.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  A referendum to establish a constitutional ban on same-sex marriage in Romania has failed - after only a fifth of voters bothered to turn out.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற